திருச்சிராப்பள்ளி தேசிய தொழில் நுட்ப கழகத்தின் வேதிப்பொறியியல் துறையின், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மத்திய அமைச்சர் பொக்ரியால் நிஷாங், வேதிப்பொறியியல் துறையின் பொன்விழா கட்டத்தை காணொலி வாயிலாக திறந்துவைத்தார்.
இதன்பின் பேசிய அவர், “நாட்டிலேயே பொறியியல் கல்வி நிறுவனங்களில் ஒன்பதாம் இடத்தைப் பிடிப்பது என்பது சாதாரணமானது அல்ல, அந்த நிலையை எட்டியதற்காக திருச்சி என்ஐடியை பாராட்டுகிறேன்.
புதிய அறிவுசார் காப்புரிமை விண்ணப்பம் மற்றும் அறிவுசார் காப்புரிமை பெறுதல் மூலமாக அதிகமான புதிய ஸ்டார்ட் அப் உருவாகவும், புதிய தொழில் முனைவோர்கள் உருவாகவும் என்ஐடி சரியான இலக்குடன் பயணிக்கிறது. இதன்மூலம் இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை அளிப்பவர்களாக மாறும் சூழ்நிலை உருவாகும்.
அட்மா நிர்பார் பாரத், உள்ளட் பாரத், சுதேஷ் பாரத் திட்டங்களில் இணைந்து சமூகத்திற்கு மேலும் பல சேவைகளை என்ஐடி செய்ய வேண்டும்.
பாரத் அபியாள் திட்டத்தின் வாயிலாக கிராமங்களை தத்தெடுத்து கிராமங்களில் உள்ள மாணவர்களை பொறியியல் கல்லூரி போட்டித் தேர்விற்கு தயார் செய்து, தேர்ச்சியடையத் வைத்து என்ஐடியிலேயே இடம் கிடைக்கச் செய்த சாதனைக்காக பாராட்டுகிறேன்” எனத் தெரிவித்தார்.