ETV Bharat / state

கே.என். நேரு தொகுதியில் மழைநீர் வடிகால் தளம் திறப்பு! - KN Nehru constituency

திருச்சி: மதினா பள்ளிவாசல் தெருவில் கட்டப்பட்டுள்ள மழைநீர் வடிகால் தளம் இன்று திறந்துவைக்கப்பட்டது.

 Rainwater drainage site inaugurated in KN Nehru constituency

author img

By

Published : Aug 24, 2020, 12:31 PM IST

திருச்சி மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரான கே.என். நேருவின் தொகுதியில், தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் பல்வேறு நலத்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இந்த வகையில் திருச்சி 49ஆவது வார்டுக்குள்பட்ட மதினா பள்ளிவாசல் தெருவில் ரூ.12 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் தளம் அமைக்கப்பட்டது. இதன் கட்டுமான பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று வடிகால் தளத்திற்கான திறப்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவுக்குச் சட்டப்பேரவை உறுப்பினர் கே.என். நேரு தலைமை வகித்தார். வழக்குரைஞர் பாஸ்கர் மழைநீர் வடிகால் தளத்தை திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன், திருச்சி மாவட்ட ஊராட்சித் தலைவர் தர்மன் ராஜேந்திரன், அந்தநல்லூர் ஒன்றியத் தலைவர் துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.