ETV Bharat / state

"ராகுல் காந்தியின் 2ஆம் கட்ட நடைப்பயணம் இந்திய கூட்டணிக்கு வலு சேர்க்கும்" - திருநாவுக்கரசர் எம்.பி! - குஜராத் மாநில அரசு

Congress MP Thirunavukkarasar: ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடைபயணம் இந்திய (I.N.D.I.A) கூட்டணிக்கு வலு சேர்க்கும் என திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2024, 10:59 PM IST

"ராகுல் காந்தியின் 2ஆம் கட்ட நடைபயணம் இந்திய கூட்டணிக்கு வலு சேர்க்கும்" - திருநாவுக்கரசர் எம்.பி!

திருச்சி: திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பொங்கல் விழா காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டார். தொடர்ந்து கட்சியினருக்குப் பொங்கல் பரிசுகள் மற்றும் வேட்டி, சேலைகளை வழங்கினார்.

இதனை அடுத்து திருச்சி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "நாடாளுமன்றத் தேர்தலானது அடுத்து சில மாதங்களில் தொடங்க உள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய இரண்டாம் கட்ட நடைப் பயணத்தை வரும் ஜனவரி 14ஆம் தேதி மணிப்பூரிலிருந்து தொடங்குகிறார். அவரது முதல் கட்ட நடைப்பயணம் இந்தியா முழுவதும் இமாலய வெற்றியைப் பெற்றது.

அதேபோல் இரண்டாம் கட்ட நடைப்பயணமும் மிகப்பெரிய எழுச்சியை நிச்சயம் ஏற்படுத்தும். இந்த நடைப்பயணமானது நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய (I.N.D.I.A) கூட்டணிக்கு வலு சேர்க்கும். அதைப் போன்று காங்கிரஸ் கட்சியையும் பலப்படுத்தும். வரும் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க அந்த நடைப்பயணம் எளிதாக்கும். அந்த நடைப்பயணம் வெற்றி பெறத் தமிழ்நாடு மக்கள் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என கூறினார்.

இதனைத் தொடர்ந்து பில்கிஸ் பானு விவகாரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "பில்கிஸ் பானு விவகாரத்தில் 11 பேரை விடுதலை செய்து குஜராத் மாநில அரசு பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இது வரவேற்கக் கூடிய தீர்ப்பு. இந்தியாவின் உட்சபட்ச அதிகாரம் கொண்ட நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்தான் அவர்களின் உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து, "திருச்சியில் விமான நிலையம் திறப்பு மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற விழா முழுமையாக அரசு விழாவாக நடைபெறவில்லை. அந்த விழாவில் அரசியல் கலப்பு இருந்தது. அதனால் தான் அந்த நிகழ்வு விமர்சனத்திற்கு உள்ளாகி சர்ச்சைக்குரியதாக உள்ளது" என தெரிவித்தார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட தலைவர் ரெக்ஸ் கவுன்சிலர் கோவிந்தராஜன் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடி முந்திரி ஏற்றுமதி செய்வதாக ரூ.40.5 லட்சம் மோசடி செய்த நபர் கைது.!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.