ETV Bharat / state

"மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் இளம்பெண் உயிரிழப்பு" - பெண்ணின் பெற்றோர் கதறல்! - tamil news

Wrong treatment in trichy hospital - girl died: தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் இளம்பெண் உயிரிழந்ததாகக் கூறி, மருத்துவரை கைது செய்ய வலியுறுத்தி அப்பெண்ணின் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

a young girl died due to hospital false treatment
தவறான சிகிச்சையால் இளம்பெண் உயிரிழப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 1:47 PM IST

மருத்துவரை கைது செய்ய என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

திருச்சி: திருவெறும்பூர் அடுத்து உள்ள திடீர் நகர் பகுதியை சேர்ந்தவர் மதன், இவரது மனைவி ரேணுகா. இவர்களது மகள் ரூபசௌந்தரி (20). இவருக்கு காதில் ஏற்பட்ட ஓட்டையின் காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு வலது காதில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தற்போது இடது காது பகுதியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள மருத்துவர் ஜானகிராம் என்பவரது மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

கடந்த 11 ஆம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் என மருத்துவர் தெரிவித்த நிலையில், அன்று காலை 9 மணி அளவில் அறுவை சிகிச்சைக்கான அரங்கிற்கு ரூபசௌந்தரியை மருத்துவர் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் சிறிது நேரம் கழித்து அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக உடனடியாக அருகில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக சேர்க்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ரூபசௌந்தரி, அருகில் உள்ள இருதய சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் அங்கிருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தற்பொழுது காப்பாற்றுவது கடினம் என சொன்னதுடன் தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி ரூபசௌந்தரி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த உறவினர்கள் தவறான சிகிச்சை அளித்ததால் தான் மரணம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் உடனடியாக தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் ஜானகிராமை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி ரூபசௌந்தரியின் உறவினர்கள் மற்றும் தொழிலாளி ஐக்கிய முன்னணி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென திருச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வந்த காவல்துறை துணை ஆணையர் அன்பு மற்றும் காவல்துறையினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடன் பேச்சு வார்த்தை நடத்தினர். உரிய நீதி கிடைக்க வேண்டும், மருத்துவர் ஜானகிராமன் கைது செய்யப்பட வேண்டும், இறந்து போன அந்த பெண்ணின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக அரசு மருத்துவமனை சாலையில் பரபரப்பு ஏற்பட்டு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கனரக வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து - ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.