திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பாத்திமலையைச் சேர்ந்தவர் சரவணன். இவரது சகோதரர் கிருஷ்ணன். இவர்களுக்குள் சொத்து பிரச்னை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், மணப்பாறை பேருந்து நிலையம் எதிரே இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், சரவணன் சர்பத் பாட்டில் மூலம் கிருஷ்ணனை தாக்க முயற்சித்துள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சகோதரி சரசு, அதைத் தடுக்க முயற்சித்தபோது சர்பத் பாட்டில் அவரது தலையில் பட்டுள்ளது.இதில் காயம் அடைந்த சரசு, சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக மணப்பாறை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.