ETV Bharat / state

போதையில் பேருந்தை தாறுமாறாக இயக்கிய தனியார் பேருந்து ஓட்டுநருக்கு அபராதம்! - பேருந்தை தாறுமாறாக இயக்கிய தனியார் பேருந்து ஓட்டுநர்

பட்டப்பகலில் குடிபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநரை அடையாளம் கண்டு விபத்திற்குள்ளாகும் முன் நடவடிக்கை எடுத்த போக்குவரத்துக் காவலர்களை பயணிகளும் பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

போதையில் பேருந்தை தாறுமாறாக இயக்கிய தனியார் பேருந்து ஓட்டுநருக்கு அபராதம்!

author img

By

Published : Jun 28, 2022, 9:57 PM IST

Updated : Jun 28, 2022, 10:16 PM IST

திருச்சி துவரங்குறிச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற தனியார் பேருந்து மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில், ஓட்டுநர் அப்பேருந்தை ஒரு வழிப்பாதையில் இயக்கி உள்ளார்.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துக் காவலர்கள் பேருந்தை பின் தொடர்ந்து சென்று கோவில்பட்டி சாலையில் உள்ள காமராஜர் சிலை என்ற இடத்தில் பேருந்தை இடைநிறுத்தி ஓட்டுநரை விசாரணை செய்தனர்.

அப்போது ஓட்டுநர் போதையில் இருப்பது தெரிய வந்ததையடுத்து, மது அளவு பரிசோதனை செய்யும் கருவியில் அவரை ஊதச்சொல்லி பரிசோதனை செய்ததில் போதையின் அளவு 219ஆக பதிவாகியது.

இதையடுத்து போக்குவரத்து காவல் ஆய்வாளர் நவாசுதீன் பேருந்து ஓட்டுநரான புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரைச் சேர்ந்த K.வெள்ளைச்சாமி (36) என்பவருக்கு மதுபோதையில் வாகனத்தை இயக்கியதற்காக 1500 ரூபாய் அபராதம் விதித்து பேருந்தை மாற்று ஓட்டுநர் மூலம் எடுத்துச்செல்ல அறிவுறுத்தினார்.

பட்டப்பகலில் குடிபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநரை அடையாளம் கண்டு பேருந்து விபத்திற்குள்ளாகும் முன் நடவடிக்கை எடுத்த போக்குவரத்துக் காவலர்கள் சரவணன் மற்றும் அய்யப்பன் - உள்ளிட்டோரை பேருந்து பயணிகளும்,பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

போதையில் பேருந்தை தாறுமாறாக இயக்கிய தனியார் பேருந்து ஓட்டுநருக்கு அபராதம்!

இதையும் படிங்க : ஸ்ரீரங்கத்தில் பல்லி விழுந்த பழச்சாற்றை அருந்தியவர் மருத்துவமனையில் சிகிச்சை - கடையில் ரெய்டுவிட்ட அலுவலர்கள்

Last Updated : Jun 28, 2022, 10:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.