ETV Bharat / state

இடி தாக்கி கர்ப்பிணி உட்பட இருவர் பலி!

திருச்சி: துறையூர் அருகே மின்னல் தாக்கி 8 மாத கர்ப்பிணியும், அவரது தம்பியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இடி தாக்கியதில் பலியானவர்கள்
author img

By

Published : Jun 4, 2019, 11:29 PM IST

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அம்மம்பாளையத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கு மகள் முத்துலட்சுமி(21), மகன் குணசேகரன்(17) உள்ளனர். முத்துலட்சுமி திருமணமாகி எட்டுமாதம் கர்ப்பிணியாக உள்ளார். குணசேகரன் 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரியில் சேருவதற்காக காத்திருந்தார். பிரசவத்திற்காக முத்துலட்சுமி அம்மம்பாளையத்தில் உள்ள தாய் வீட்டிற்கு வந்திருந்தார்.

இந்நிலையில் இன்று மாலை தம்பி குணசேகரனுடன் முத்துலட்சுமி ஆடு மேய்ப்பதற்காக வயல்வெளிக்கு சென்றார். அப்போது திடீரென மழை பெய்துள்ளது. இதையடுத்து இருவரும் அங்கிருந்த தகரக் கொட்டகையில் ஒதுங்கி நின்றனர். அப்போது பயங்கரமான இடியுடன் கூடிய மின்னல் இருவரையும் தாக்கியது. இதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சபதம் கேட்டு குடும்பத்தினரும், ஊர் மக்களும் அலறி அடித்துக்கொண்டு வயல்வெளிக்கு ஓடிச்சென்று பார்த்தபோது, இருவரும் சடலமாக கிடந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த துறையூர் காவல்துறையினர், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Intro:திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மின்னல் தாக்கி 8 மாத கர்ப்பிணியும் அவரது தம்பியும் உயிரிழந்தனர்.

Body:குறிப்பு: இதற்கான புகைப்படம் மெயில் மற்றும் ftp மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது....

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே இடி மின்னல் தாக்கியதில் கர்ப்பிணி உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அம்மம்பாளையத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகள் முத்துலட்சுமி. (வயது 21). மகன் குணசேகரன். (வயது 17). இவர் ப்ளஸ் டூ முடித்து விட்டு கல்லூரியில் சேருவதற்காக காத்திருந்தார்.
முத்துலட்சுமிக்கும் பெரம்பலூரை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. தற்போது முத்துலட்சுமி 8 மாத கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் பிரசவத்திற்காக முத்துலட்சுமி அம்மம்பாளையத்தில் உள்ள தாய் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது இன்று மாலை தம்பி குணசேகரனுடன் முத்துலட்சுமி ஆடு மேய்ப்பதற்காக வயல்வெளிக்கு சென்றார். அப்போது திடீரென மழை பெய்துள்ளது. இதையடுத்து இருவரும் அங்கிருந்த தகரக் கொட்டகையில் ஒதுங்கி நின்றனர். அப்போது பயங்கரமான இடியுடன் கூடிய மின்னல் இருவரையும் தாக்கியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்த அவர்களது குடும்பத்தினரும், ஊர் மக்களும் அலறி அடித்துக்கொண்டு வயல்வெளிக்கு ஓடினர். இருவரது உடல்களையும் பார்த்து கதறி அழுதனர். துறையூர் போலீசார் விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஒரே கிராமத்தில் அக்காள், தம்பி உயிரிழந்த சம்பவம் அப்பகுது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Conclusion:இச்சம்பவம் குறித்து துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.