ETV Bharat / state

பதவியேற்ற நாளிலேயே அதிரடியை ஆரம்பித்த திருச்சி ஆட்சியர்! - Trichy Collector who started action

திருச்சி மாவட்ட புதிய ஆட்சியராக பிரதீப் குமார் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பின், அரசு பொது மருத்துவமனையில், கரோனா சிறப்புச் சிகிச்சைப் பிரிவு, உள் நோயாளிகள் மற்றும் புற நோயாளிகள் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்டப் பல்வேறு மருத்துவ சிகிச்சைப் பிரிவுகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பதவியேற்ற நாளிலேயே அதிரடியை ஆரம்பித்த திருச்சி ஆட்சியர்
பதவியேற்ற நாளிலேயே அதிரடியை ஆரம்பித்த திருச்சி ஆட்சியர் !
author img

By

Published : Jun 16, 2022, 4:29 PM IST

திருச்சி மாவட்ட ஆட்சியராகப் பதவி வகித்து வந்த சிவராசு, கோயம்புத்தூர் வணிகவரித்துறை இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்ட நிலையில், திருச்சி மாவட்ட புதிய ஆட்சியராக பிரதீப் குமார் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய மாவட்ட ஆட்சியருக்கு அரசு அதிகாரிகள், ஆட்சியராக அலுவலர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர், "மக்கள் குறைதீர் கூட்டத்தில் வரும் மனுக்களை உரிய முறையில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும், விவசாயம், கல்வி, மருத்துவம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, குடிநீர், சாலை வசதி மேம்பாடு மற்றும் தெருவிளக்குகள் சிறப்பான முறையில் இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

பதவியேற்ற நாளிலேயே அதிரடியை ஆரம்பித்த திருச்சி ஆட்சியர் !

தமிழ்நாடு அரசின் மக்கள் நலத்திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றவர் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காகத் தோண்டப்பட்ட சாலைகள் மோசமானதை அடுத்து விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும் துரித நடவடிக்கை மேற்கொள்வேன்.

பட்டா மாறுதல் தொடர்பான காலதாமதத்தை, சிரமங்களை போக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரம் கருமுட்டை விவகாரம் மற்றும் மருத்துவம் தொடர்பான எந்த விவகாரத்திலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என புதிதாகப் பெற்றுள்ள மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்தார்.

பேட்டியை முடித்தவர் அதிரடியாக அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில், கொரோனா சிறப்புச் சிகிச்சைப் பிரிவு, உள் நோயாளிகள் மற்றும் புற நோயாளிகள் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சைப் பிரிவுகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதையும் படிங்க: திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்களை விடுவிக்க வேண்டும் - மணியரசன் கோரிக்கை...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.