ETV Bharat / state

நெருங்கும் பொங்கல்..திருச்சியில் கரும்பு விலை நிலவரம் - பொங்கல் சிறப்புத் தொகுப்பு உடன் கரும்பு

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், வெளிச் சந்தையில் ஒரு கட்டு கரும்பின் விலை ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனை செய்வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

பொங்கல்
பொங்கல்
author img

By

Published : Jan 13, 2022, 12:44 PM IST

திருச்சி: பொதுமக்கள் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாட தமிழ்நாடு அரசு முழுக் கரும்புடன் கூடிய 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கிவருகிறது. தமிழ்நாடு அரசு கரும்பு ஒன்றுக்கு 33 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்யுமாறு அறிவித்துள்ளது.

கரும்பு ஒன்று ரூ.15 முதல் ரூ.16 வரை மட்டுமே இடைதரகர்கள் கேட்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். கரும்பு ஒன்றுக்கு ரூ.16 வரை செலவு செய்து விளைவித்த நிலையில், அதே விலைக்கு கேட்பது எந்த வகையில் நியாயம் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி, திருவளர்ச்சோலை பகுதியில் கரும்பு விவசாயம் பரவலாக நடந்து வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்புகளை வெட்டி விற்பனைக்கு கொண்டு செல்லும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து விவசாயி, கலியமூர்த்தி கூறுகையில், "அரசு கரும்பு ஒன்றுக்கு 33 ரூபாய் கொடுத்து கொள்முதல் செய்ய அறிவித்துள்ளது. ஆனால், ரூ.15 முதல் ரூ.16 வரை மட்டுமே வாங்குகின்றனர். வெளிச் சந்தையில் ஒரு கட்டு கரும்பின் விலை (10 கரும்புகள் தொகுப்பு) 200 முதல் 250 ரூபாய் வரை விற்பனையாகிறது. அதே, கணு தள்ளி பருமனாக இருந்தால் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது" என்றார்.

விவசாயிகளிடம் சில்லரை விற்பனையாளர்கள் கரும்பு ஒன்று 15 ரூபாய் முதல் 18 ரூபாய் வரை என கொள்முதல் செய்து, 50 ரூபாய் வரை விற்பனை செய்வதாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஜல்லிக்ட்டு; 'ஏலேய்... கிட்டி போடாத, மாட பிடி.. பரிச வாங்கு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.