ETV Bharat / state

திருச்சியில் இளைஞரைத் தாக்கி பாலியல் தொல்லை அளித்த ஐந்து நபர்கள் கைது! - Trichy District News

Sexually harassing a youth in Trichy: திருச்சியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரைப் பார்க்க வந்த தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரை, ஆயுதங்களால் தாக்கி மிரட்டி பாலியல் தொல்லை அளித்த 5 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Police arrested five youths for assaulting and sexually harassing a youth in Trichy
திருச்சியில் இளைஞரைத் தாக்கி பாலியல் தொல்லை அளித்த ஐந்து இளைஞர்கள் கைது
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 17, 2023, 1:56 PM IST

திருச்சி: தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார்.

அதில், “நான் சமயபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் வாகன விபத்தில் சிக்கி சிகிச்சையில் உள்ள நண்பரின் சகோதரரைப் பார்த்துவிட்டு வீட்டிற்குச் செல்வதற்காக நின்றபோது, ஒரு இளைஞர் லிப்ட் கொடுப்பது போன்று சமயபுரம் அடுத்து இருங்களூர் அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு தன்னை, ஐந்து இளைஞர்கள் அடைத்து வைத்து, வாள் மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்களால் தாக்கி, மிரட்டி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி, சமயபுரம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இறக்கிவிட்டுச் சென்று விட்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் பலத்த காயம் அடைந்த இளைஞர், திருச்சி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதனை அடுத்து, திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பெயரில், லால்குடி சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் அஜய்தங்கம் தலைமையில், சமயபுரம் காவல் ஆய்வாளர் விதுன்குமார் உள்ளிட்ட தனிப்படை போலீசார் அந்தப் பகுதியில் சென்று பார்த்தனர்.

அப்போது சமயபுரம் அருகே இருங்கலூர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் இருந்த 5 பேரை பிடிக்க முயன்றபோது தப்பி ஓடிய வசந்த், ரவி போஸ்கோ இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டு, திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், அய்யனார், யுவராஜ், கவியரசன் ஆகிய மூன்று பேரை கைது செய்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு பல்வேறு கொலை கொள்ளை குற்றவாளிகள் தொடர்புடைய ரவுடி ஜெகனை போலீசார் கைது செய்ய முயன்றபோது, போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற போது போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் ரவுடி ஜெகன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். ரவுடி ஜெகனின் கூட்டாளியான பாட்டில் மணி என்பவர் மீது கொலை, அடிதடி, கொள்ளை என 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதனால் தன்னையும், திருச்சி மாவட்ட போலீசார் என்கவுண்டர் செய்து விடுவார்கள் என குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்ட போலீசார் பாட்டில் மணியையும் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஆயுதங்களால் இளைஞரைத் தாக்கி, மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வைத்த வசந்த், ரவி போஸ்கோ, அய்யனார், யுவராஜ், கவியரசன் ஆகிய 5 பேரும் பாட்டில் மணியின் கூட்டாளிகள் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், இந்த ஐந்து இளைஞர்களும் ஏற்கனவே திருச்சி - சென்னை சமயபுரம் தேசிய நெடுஞ்சாலையில் திருநங்கை ஒருவரை தாக்கி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: இளம் பெண் தற்கொலை வழக்கு; குற்றத்தை ஒப்புக்கொண்ட புஷ்பா பட நடிகர் சிறையில் அடைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.