ETV Bharat / state

முதியோர் இல்ல பணியாளர்களுக்கு தசை பயிற்சி

author img

By

Published : Jun 21, 2020, 3:21 PM IST

Updated : Jun 21, 2020, 3:30 PM IST

திருச்சி: அவசர காலங்களில் முதலுதவி அளிக்க தாமதம் ஏற்படாமல் இருக்க முதியோர் இல்ல பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

physiotherapy training to old age home employees in trichy

திருச்சி மாவட்டம் கிராப்பட்டியில் செயல்பட்டுவருகிறது கங்காரு கருணை இல்லம். இங்கு முதியோர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் என 180 பேர் தங்கியுள்ளனர். இவர்களை பராமரிப்பதற்காக 30 ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், காப்பகத்தில் தங்கியுள்ள முதியோருக்கு ஏதேனும் அவசர சிகிச்சை தேவைப்பட்டால் உடனடியாக முதலுதவி அளிக்க உதவும் வகையில், ஊழியர்களுக்கு தொடர்ந்து பல்வேறு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தசை பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஜூன் 21) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கங்காரு இல்ல செயல் இயக்குநர் ராஜா தலைமை வகிக்க, இயற்பியல் நிபுணர் டாக்டர் ஜெயசூர்யா ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தார். அதில், மாரடைப்பு, வலிப்பு, எலும்பு முறிவு, மூச்சுத் திணறல் போன்றவை முதியோருக்கு ஏற்பட்டால் உடனடியாக எவ்வாறு முதலுதவி அளிப்பது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கங்காரு இல்ல மேலாளர் வேல்முருகன் செய்திருந்தார்.

இந்த நிகழ்ச்சி குறித்து கங்காரு இல்ல செயல் இயக்குநர் ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஹீடு இந்தியா என்ற தொண்டு நிறுவனத்தின் கீழ் கங்காரு முதியோர் இல்லம், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லம், மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

கடந்த 17 ஆண்டுகளாக இந்நிறுவனம் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கி உள்ள முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிடும் வகையில் ஊழியர்களுக்கு இன்று தசை பயிற்சி குறித்த வகுப்புகள் நடத்தப்பட்டன.

இங்கு தங்கியுள்ள அனைவரும் குடும்பத்தினரால் கை விடப்பட்டவர்கள். உடல் ரீதியாக குறைபாடு உள்ளவர்கள். அவர்கள் தன்னம்பிக்கையோடு வாழ்வதற்கு ஏற்ற வகையில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

Last Updated : Jun 21, 2020, 3:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.