ETV Bharat / state

பட்டியலின பெண் ஊராட்சித் தலைவரை செயல்படவிடாமல் தடுக்கும் துணைத் தலைவர் - trichy district news

தன்னை பணிசெய்யவிடாமல் தடுக்கும் ஊராட்சித் துணைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பெருகமணி ஊராட்சி மன்றத் தலைவர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

Perugamani dalith panchayat leader hunger strike
பட்டியலின பெண் ஊராட்சித் தலைவரை செயல்படவிடமால் தடுக்கும் துணை ஊராட்சித் தலைவர்
author img

By

Published : Oct 21, 2020, 5:45 PM IST

Updated : Oct 21, 2020, 7:30 PM IST

திருச்சி: திருச்சி மாவட்டம் பெருகமணி ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் கிருத்திகா அருண்குமார். பட்டியலினத்தைச் சேர்ந்த இவர் ஊராட்சி மன்ற காந்திசிலை முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார்.

இது குறித்து அவர் கூறும்போது, "ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மணிமேகலை லட்சுமணன், ஊராட்சி செயலாளர் செந்தில்குமார், எட்டாவது வார்டு உறுப்பினர் செந்தில்குமார் உள்ளிட்டோர் என்னைப் பணி செய்யவிடாமல் தொடர்ந்து தடுத்துவருகின்றனர்.

பெருகமணி ஊராட்சி மன்றத் தலைவர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம்

மேலும், என் அனுமதியின்றி தண்ணீர் வரியை உயர்த்தியுள்ளனர். இதனால், ஊராட்சி மன்றத்திற்குச் செல்வதற்கே பயமாக இருக்கிறது" என்றார்.

கிருத்திகா உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கு வந்த அந்தநல்லூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா தேவி, அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்ததைத் தொடர்ந்து கிருத்திகா அருண்குமார் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார்.

இதையும் படிங்க: திருச்சி என்ஐடி மாணவர்களை பாராட்டிய மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

Last Updated : Oct 21, 2020, 7:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.