ETV Bharat / state

'கறுப்புப் பூஞ்சை நோய் தாக்கியவர்களுக்கு அறுவை சிகிச்சை அவசியம்' - மருத்துவர் ஜானகிராமன்

திருச்சி: கறுப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்வது அவசியம் என ராயல் பேர்ல் மருத்துவமனை மேலாண்மை இயக்குநர் மருத்துவர் ஜானகிராமன் கூறினார்.

ராயல் பேர்ல் மருத்துவமனை
‘கறுப்பு பூஞ்சை நோய் தாக்கியவர்களுக்கு அறுவை சிகிச்சை அவசியம்’
author img

By

Published : May 30, 2021, 6:26 PM IST

திருச்சியில், ராயல் பேர்ல் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மேலாண்மை இயக்குநரும்,அறுவை சிகிச்சை நிபுணருமான மருத்துவர் ஜானகிராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 'கரோனா பாதித்த நபர்களுக்கு கறுப்புப் பூஞ்சை நோய் மிக வேகமாக வந்து கொண்டிருக்கிறது. இந்த நோய் ஒரு வகை உயிர்க்கொல்லி நோயாகும். இந்த நோய் முதலில் மூக்குப் பகுதியை பாதிக்கும். பின் மூக்கடைப்பு, மூக்கில் இருந்து கறுப்பு நிற அழுக்கு வெளிப்படுதல், கண்களுக்குக் கீழ் மரத்துப்போதல், தலைவலி, கண் வீக்கம், கண் நகர்த்த முடியாமல் போகுதல், சைனஸ் பிரச்னை, கண்பார்வை மங்குதல், பல் வலி, பல் ஆடுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

’கறுப்புப் பூஞ்சை நோய் தாக்கியவர்களுக்கு அறுவை சிகிச்சை அவசியம்’

இவை தெரிந்தவுடன் உடனடியாக காது, மூக்கு, தொண்டை நிபுணரை ஆலோசிக்க வேண்டும். தாமதப்படுத்தினால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த நோய் அதிகமானால் மூளையைப் பாதிக்கும். கரோனா நோயால் பாதித்தவர்கள் அதிக அளவில் வென்டிலேட்டரில் இருந்திருப்பார்கள். இதனால் சர்க்கரை நோய் அதிகரித்து கறுப்புப் பூஞ்சை வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும். உடலில் சர்க்கரை நோய் அதிகம் இருந்தால், கரோனா வந்த பிறகு நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். அதனால் கறுப்புப் பூஞ்சை நோய் உருவாகிறது.

அடுத்ததாக முகக்கவசம் அணிவதில் மிகக்கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு முறையும் முகக்கவசத்தை கழுவி அணியவேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் முகக்கவசத்தையே பெரும்பாலும் பயன்படுத்த வேண்டும். கறுப்புப் பூஞ்சை நோய் வந்தவர்களுக்கு உடனடியாக எம்ஆர்ஐ ஸ்கேன் செய்ய வேண்டும். அதன் பின்னர் எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக இதற்கான ஊசி, மருந்து ஆகியவை அரசிடம் மட்டுமே உள்ளது. ஆகையால் இந்த ஊசி, மருந்து எளிதில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மருந்தை கூடுதல் விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும் சூழல் உள்ளது. ஆகையால் இதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

மேலும் கடந்த ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதியே நான் ஒரு தகவலை வெளியிட்டு இருந்தேன். கரோனா நோய்த் தாக்கியவர்களுக்கு கறுப்புப் பூஞ்சை நோய் கட்டாயம் வரும் என்று முதன்முதலாக கூறியிருந்தேன். அது தற்போது உண்மையாகியுள்ளது' என்றார்.

இதையும் படிங்க: கரோனா வார்டில் ஸ்டாலின்: பிபிஇ கிட் அணிந்து நோயளிகளிடம் நலம் விசாரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.