ETV Bharat / state

சாலை ஆக்கிரமிப்பு தகராறு; ஜான்பாண்டியன் கட்சி நிர்வாகியை சுற்றி வளைத்த பொதுமக்கள்! திருச்சியில் நடந்து என்ன?

நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்றுவதில் ஏற்பட்ட தகராறில் தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாவட்டச் செயலாளர் பாலகங்காதர பாண்டியனை பொதுமக்கள் சுற்றி வளைத்தனர்.

சாலை ஆக்கிரமிப்பு தகராறில் ஜான்பாண்டியன் கட்சி நிர்வாகியை சுற்றி வளைத்த பொதுமக்கள்!!

author img

By

Published : Apr 21, 2023, 10:14 AM IST

சாலை ஆக்கிரமிப்பு தகராறில் ஜான்பாண்டியன் கட்சி நிர்வாகியை பொதுமக்கள் சுற்றி வளைத்ததால் பரபரப்பு

திருச்சி: மணப்பாறை எடத்தெருவை சேர்ந்த நாகராஜ் என்பவர் அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது கடையை ஒட்டிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் புதுக்கோட்டையைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் டீக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு பரமசிவம் இறந்ததால் அவரது குடும்பத்தினர் கடையைப் பூட்டிவிட்டு சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர்.

கடை பூட்டியே கிடந்ததால் அதை அப்புறப்படுத்தக் கோரி மளிகை கடை உரிமையாளரான நாகராஜ் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சுப்பையாவிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பை அகற்ற சாலை ஆய்வாளர் சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த நாகராஜனின் உறவினரான தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாவட்டச் செயலாளர் பாலகங்காதர பாண்டியன், ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து கண் இமைக்கும் நேரத்தில் டீ கடையைத் தரைமட்டமாக்கியுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத பரமசிவத்தின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகியை சுற்றி வளைத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணப்பாறை காவல்துறையினர் இரு தரப்பினரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். காவல்துறையின் பேச்சுவார்த்தைக்கு எடத்தெரு மக்கள் கட்டுப்படவில்லை. அதன் பிறகு வந்த நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது குறித்து அளித்த விளக்கத்தின் பேரில் சமரசம் அடைந்தனர். மேலும் வெளியூரில் இருந்து தங்கள் பகுதிக்கு வந்த நபர் கடையை இடித்ததால் பிரச்சனை என்றும், அதனால் அவரே தனது சொந்த செலவில் அந்த கடையை மீண்டும் சீரமைத்து தர வேண்டும் என்று கூறினர்.

மேலும் ஆக்கிரமிப்பை மீறி அமைக்கப்பட்ட கடையை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றக் கூறும் போது நாங்களே அகற்றி கொள்கிறோம் என கூறினர். இதற்கு நாகராஜன் தரப்பினர் ஒப்பு கொண்டதை அடுத்து பிரச்சனை சமரசமாக முடிவடைந்தது. ஆக்கிரமிப்பை அகற்றும் விவகாரத்தில் கட்சி நிர்வாகியை பொதுமக்கள் சுற்றி வளைத்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக பதற்றம் நிலவியது.

இதையும் படிங்க: நெருங்கும் ரம்ஜான் - மணப்பாறை சந்தையில் விலை போகாத ஆடுகள்... உரிமையாளர்கள் சோகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.