திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சீத்தப்பட்டியைச் சேர்ந்தவர் குமார். இவரது 70 அடி ஆழமுள்ள கிணற்றில் மூன்று வயதுள்ள பெண் மயில் ஒன்று தவறி விழுந்த நிலையில் பறக்க முடியாமல் தத்தளித்தது.
இதைக் கண்ட கிணற்றின் உரிமையாளர் குமார், மணப்பாறை தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், பெண் மயிலை மீட்டு மணப்பாறை வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மேலும், குறித்த நேரத்தில் தகவலளித்து, உயிருக்குப் போராடிய மயிலை உயிருடன் மீட்க உதவிய விவசாயியையும், தீயணைப்பு வீரர்களையும் அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
இதையும் படிங்க: விலங்குகளின் உறுப்புகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த சித்த மருத்துவர் கைது