திருச்சி மாநகர காவல் சட்டம் ஒழுங்கு பிரிவு துணை ஆணையராக பணியாற்றி வந்த நிஷா சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இவருக்கு பதிலாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் காவல் கூடுதல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பவன் குமார் ரெட்டிக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, திருச்சியில் உள்ள அலுவலகத்தில் பவன்குமார் ரெட்டி நேற்று (ஜூலை 23) துணை ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார். திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின்பேரில் திருச்சி மாநகரில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட பணியாற்றுவேன் என்று அவர் கூறினார்.
புதிதாக பொறுப்பேற்ற துணை ஆணையருக்கு உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.