ETV Bharat / state

தமிழ்நாட்டில் படிக்க வரும் வெளிமாநில மாணவர்கள் தமிழ் கற்க வேண்டும்: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் - Trichy News

வெளி மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு கல்வி கற்க வரும் மாணவர்கள் தமிழ் மொழியை எழுதவும், பேசவும் கற்றுக்கொள்ள வேண்டும் என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் படிக்க வரும் வெளி மாநில மாணவர்கள் தமிழ் கற்க வேண்டும்

author img

By

Published : Jan 22, 2023, 3:08 PM IST

''வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வரும் மாணவர்கள் தமிழ் எழுத, படிக்க கற்றுக்கொள்ள வேண்டும்"

திருச்சி: தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் புதிதாக கட்டப்பட்ட விரிவுரை கூட்டரங்கின் திறப்பு விழா மற்றும் புதிய இணைப்புக் கட்டடங்களுக்கு பூமி பூஜை விழா இன்று நடந்தது. அதில் விரிவுரைக் கூட்டரங்கின் மேல்தள விரிவாக்கமானது ₹14 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இணைப்புக் கட்டடங்கள் ₹.64 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், "புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்ட பின்னர் கரோனா பாதிப்பு, ரஷ்யா - உக்ரைன் போர் ஆகியன உலக அளவில் சவாலாக இருந்தது. இந்தச் சூழலில் அதற்கு முன்னர் வடிவமைக்கப்பட்ட புதிய கல்விக்கொள்கை அந்தச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

தற்போதைய உலக சூழலில் மாணவர்கள் புதிய சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. இங்கிலாந்தைக் கட்டிலும் இருமடங்கு மக்கள் தொகை கொண்டது, தமிழ்நாடு. தமிழ் மொழி மிக அழகான மொழி. நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து இருந்து வந்து திருச்சி என்.ஐ.டி-யில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் தமிழ் மொழியில் பேச, படிக்க, எழுத அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும். அது நம் எதிர்காலத்திற்கு பெரிய உதவியாக இருக்கும்.

உலக ஞானத்தை கற்றுக் கொள்வதற்கு திருக்குறள் அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும். காசி தமிழ்ச் சங்க விழாவில் திருக்குறள் எனது தாய் மொழியில் மொழி பெயர்த்துக் கொடுக்கப்பட்டது. அதன் மூலம் திருக்குறளின் பெருமைகளை கற்றுக்கொண்டேன். சேக்ஸ்பியர் உள்ளிட்ட உலக அறிஞர்கள் பலரைப் பற்றி படிக்கிறோம்.

அவற்றைக் காட்டிலும் எதிர்காலத்திற்கும், மனித வாழ்வுக்கும் தேவையான ஞானம் திருக்குறளில் இருக்கிறது. மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும். அது சர்வதேச தரத்தில் அமைய வேண்டும். திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் ஆராய்ச்சி பூங்கா அமைப்பதற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைக்கு கண்ணீர் மல்க அஞ்சலி.. நெகிழ வைத்த சிவகங்கை சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.