இது குறித்து அவர் செய்தியாளர்களிடம், "முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள நிதி உதவி திட்டத்தின்கீழ் நாளொன்றுக்கு 200 குடும்ப அட்டைகள் வீதம் ஒரு நியாயவிலைக் கடையில் நிதியுதவி அளிக்கப்படும். காலை 10 மணி, 12 மணி, 2 மணி, 4 மணி என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு 50 பேர் வீதம் நிதி வழங்கப்படும்.
நியாயவிலைக் கடைக்கு வரும் பொதுமக்கள் ஒரு மீட்டர் இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். ஏப்ரல் மாதத்திற்கான நியாயவிலைக் கடை பொருள்கள் முன்கூட்டியே வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சுமார் 1.32 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இசிஎஸ் மூலம் நிதி உதவி வரவு வைக்கப்படும். தேநீர் கடை, மளிகைக் கடை, காய்கறிக் கடை, பால், மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் திறந்திருக்கலாம். ஆனால் அங்கு கூட்டமாகக் கூடக் கூடாது.
திருமண மண்டபங்கள் உள்ளிட்ட மக்கள் கூடுமிடங்களில் அன்னதானம் வழங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி பொது சமையல் உணவுத் திட்டத்தின் மாவட்ட புறநகர்ப்பகுதியில் 14 வட்டங்களில் 14 சமையலறைகளும், மாநகராட்சிப் பகுதிகளில் மூன்று சமையலறைகளும் அமைக்கப்பட உள்ளன" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'கரோனா தொற்று தடுப்புக்கு நிதி ஒதுக்கீடு
'