ETV Bharat / state

மே 5-ஆம் தேதி வணிகர் தினம் உரிமை முழக்கம் மாநாடு; திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆலோசனை கூட்டம்!

40-ஆவது மாநில மாநாட்டுக்கு பிறகு தமிழ்நாட்டில் வணிகர்களுக்கு ஒரு பாதுகாப்பு வளையத்தை மத்திய, மாநில அரசுகள் அமைத்து தர வேண்டும் என்ற பிரகடன தீர்மானத்தை எடுக்க உள்ளதாக வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

மே 5-ஆம் தேதி வணிகர் தினம் உரிமை முழக்கம் மாநாடு;திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆலோசனைக்கூட்டம்!..

author img

By

Published : Apr 8, 2023, 10:34 PM IST

மே 5-ஆம் தேதி வணிகர் தினம் உரிமை முழக்கம் மாநாடு;திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆலோசனைக்கூட்டம்!..

திருச்சி: தமிழ்நாட்டில் உள்ள நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் இடிக்கப்படும் சூழலில், வியாபாரிகளுக்கு புதிதாக உருவாக்கும் மார்கெட், பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் மாற்று இடம் வழங்க வேண்டும். வரும் மே 5 ஆம் தேதி ஈரோட்டில் வணிகர் தினம் உரிமை முழக்கம் மாநாடு நடைபெற உள்ளது. இது தொடர்பான திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளடக்கிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், மண்டலத் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில் திருச்சி - சென்னை பைபாஸ் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்
நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா மற்றும் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வணிகர்கள் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கூறுகையில், பல்வேறு சட்ட பிரச்னைகள், குறிப்பாக தென் மாநிலங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்ட செஸ் வரி, இது குறித்து முதலமைச்சருக்கு கொண்டு சென்று அதனை திரும்ப பெற்றுக் கொண்டதற்காக நன்றி தெரிவித்தார்.

மேலும் “நகராட்சி, உள்ளாட்சி, பேரூராட்சி ஆகிய இடங்களில் கடைகள், பேருந்து நிலையங்கள் இடித்து கட்டடம் கட்டுகின்ற பொழுது மீண்டும் அதே கடைகளை இன்றைய நியாயமான வாடகை நிர்ணயம் செய்து வியாபாரிகளுக்கே ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். அதே போன்று பல்வேறு இடங்களில் மார்க்கெட்டுகள் இடிப்பதாகவும், அப்புறப்படுத்துவதாகவும் தகவல் வந்து கொண்டு இருக்கிறது.

அதற்கு மாற்று இடம் முறையாக கொடுக்கப்பட்டு, அதை கட்டிய வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். சாமானிய மக்கள் வியாபாரிகள் பல்வேறு சோதனைகளில் சென்று கொண்டிருக்கிறோம். அவைகளை மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள், முதலமைச்சருக்கு இந்த மாநாடு மூலம் கொண்டு செல்ல இருக்கிறோம்.

மேலும், மாநாடு பணிகள் வெகு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மாநாடு 40 ஆவது மாநில மாநாட்டுக்கு பிறகு தமிழ்நாட்டில் வணிகர்ளுக்கு ஒரு பாதுகாப்பு வளையத்தை மத்திய, மாநில அரசுகள் அமைத்து தர வேண்டும் என்ற பிரகடன தீர்மானத்தை எடுக்க இருக்கிறோம்” என தெரிவித்தார். மேலும், பால் தட்டுப்பாடு என்பது பொதுமக்கள், வியாபாரிகள் மத்தியிலும் விலகி இருந்தால் அதனை சீர் செய்வதற்கு, அந்தத் துறையின் அமைச்சரை சந்தித்து சாமானிய மக்களும் தடையில்லாமல் ஆவின் பால் கிடைப்பதற்கு தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு வலியுறுத்தும் என தெரிவித்தார்.

மீண்டும் அதே கடைகளை இன்றைய நியாயமான வாடகை நிர்ணயம் செய்து வியாபாரிகளுக்கே ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். அதே போன்று பல்வேறு இடங்களில் மார்க்கெட்டுகள் இடிப்பதாகவும், அப்புறப்படுத்துவதாகவும் தகவல் வந்து கொண்டு இருக்கிறது. அதற்கு மாற்று இடம் முறையாக கொடுக்கப்பட்டு, அதை கட்டிய வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

இதையும் படிங்க: யார் மீது கை வைத்துள்ளீர்கள் தெரியுமா? - பாஜகவுக்கு வார்னிங் கொடுத்த செல்வப்பெருந்தை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.