ETV Bharat / state

வெடிக்காத பட்டாசைக் கையில் எடுத்தபோது விபத்து - சிறுவன் படுகாயம் - பழைய தீபாவளி பட்டாசு வெடித்து விபத்து

திருச்சி அருகே மண்ணச்சநல்லூரில் சிறுவன் ஒருவன் தீபாவளிக்கு வாங்கி மீதம் இருந்த பட்டாசுகளை வெடித்து கொண்டிருக்கும் போது, வெடிக்காத பட்டாசைக் கையில் எடுத்து பார்த்தபோது எதிர்பாராதவிதமாக வெடித்ததில் சிறுவன் விரல்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி
திருச்சி
author img

By

Published : Jan 24, 2022, 8:53 PM IST

திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த அழிஞ்சகரை கிராமத்தைச் சேர்ந்த மருதை - லட்சுமி தம்பதியின் மகன் சூர்யா (16).

11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று(ஜன.24) காலை சூர்யா வீட்டின் அருகே உள்ள கோயில் முன்பு தீபாவளிக்கு வாங்கி மீதம் இருந்த பட்டாசுகளை வெடித்து கொண்டிருந்தார். அப்போது ஒரு பட்டாசு வெடிக்காமல் இருந்ததையடுத்து அதை தனது வலது கையில் எடுத்துள்ளார்.

எதிர்பாராத விதமாக அந்த பட்டாசு வெடித்ததில் சிறுவனின் மூன்று விரல்கள் படுகாயமடைந்தன.

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சூர்யாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து மண்ணச்சநல்லூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ரூ.80 ஆயிரம்.. பெற்றக் குழந்தையை விற்ற பாசக்கார தந்தை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.