ETV Bharat / state

திருச்சி ஶ்ரீரங்கம் கோயில் கிழக்கு கோபுரம் இடிந்தது எப்படி? அதிகாரிகள் கூறுவது என்ன? - இந்து கோயில்

திருச்சி ஶ்ரீரங்கம் கோயில் கோபுரம் சுண்ணாம்பு காரை மண்ணால் கட்டப்பட்டிருக்கம் நிலையில் மழை மற்றும் வெயில் காரணமாக ஏற்பட்ட சேதத்தால் இடிந்து விழுந்துள்ளது என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 5, 2023, 4:23 PM IST

Updated : Aug 5, 2023, 4:36 PM IST

திருச்சி: நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த திருச்சி ஶ்ரீரங்கம் கோயில் கிழக்கு கோபுரம் இடிந்து விழுந்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ள நிலையில், 500 ஆண்டுகளுக்கு முன்பு சுண்ணாம்பு காரை மண்ணால் கட்டப்பட்ட இந்த கோபுரம் குறிப்பிட்ட காலம் மட்டுமே உறுதியாக இருக்கும் எனவும் வெயில் மற்றும் மழையால் சேதம் ஏற்பட்ட நிலையில் இந்த விபத்து நடந்திருப்பதாகவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

அதிகாரிகளின் விளக்கம்; 108 வைணவ தளங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனவும் அழைக்கப்படும் திருச்சி ஶ்ரீரங்கம் கோயிலில் 21 பெரிய கோபுரங்கள் உள்ளது. பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்ட இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஶ்ரீரங்கர் தரிசனத்திற்காக வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், பக்தர்கள் கூட்டம் அலைமோதும் இந்த கோயிலின் கிழக்கு வாசல் நுழைவு கோபுரத்தின் இரண்டாவது அடுக்கு சுவர் நேற்று நள்ளிரவு சுமார் 1.50 மணியளவில் இடிந்து விழுந்து உள்ளது. 500 ஆண்டுகளுக்கு முன்பு சுண்ணாம்பு காரை மண்ணால் கட்டப்பட்ட இந்த கோபுரம் குறிப்பிட்ட காலம் மட்டுமே உறுதியாக இருக்கும் எனவும் வெயில் மற்றும் மழையால் சேதம் ஏற்பட்ட நிலையில் இந்த விபத்து நடந்திருப்பதாகவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

பொது மக்களின் குற்றச்சாட்டு; இந்த விபத்து பகல் நேரத்தில் நடந்திருந்தால் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கக் கூடும் என்ற நிலையில் கோயில் நிர்வாகமும், அதிகாரிகளும் ஏன் இதை இத்தனை நாட்கள் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும், இது குறித்து பேசியுள்ள அப்பகுதி மக்கள், கோபுரத்தை சீரமைக்கும் பணிக்காக திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு இந்து அறநிலை துறைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், இன்னும் இரண்டு நாட்களில் 98 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, பழமை மாறாமல் முழுமையாக கோபுரம் சீரமைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்திருந்ததாக கூறியுள்ளனர்.

6 மாதத்திற்கு ஒரு‌ முறை கோயில் கோபுரங்கள் சீரமைக்க வேண்டும் என விதிமுறைகள் உள்ள நிலையில், கோயில் நிர்வாகத்தின் அலட்சிய போக்கின் காரணமாக கோயில் கோபுரம் இடிந்து விழுந்ததுள்ளது எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்து முன்னணி போராட்டம்; இது ஒருபுறம் இருக்க, கோயில் நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால்தான் கோயில் கோபுரம் இடிந்து விழுந்ததாக இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயிலின் நுழைவு கோபுரத்தில் உள்ள நிலைகளில் விரிசல் ஏற்பட்டு உள்ளதாகவும், கீழே விழும் அபாயம் இருப்பதால் அதை உடனடியாக புணரமைக்க வேண்டும் எனவும் இந்து முன்னணி சார்பாக கோயில் நிர்வாகத்திடம் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மனு கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் அந்த மனு மீது கோயில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருந்த நிலையில் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளதாக இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. அது மட்டுமின்றி சம்பவம் நடைபெற்ற நள்ளிரவு சுமார் 1.50 மணி அளவில் அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் கோட்டச் செயலாளர் போஜராஜன் தலைமையிலான மக்கள் கோயில் வளாகத்தில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு முழக்கம் எழுப்பினர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், இணை ஆணையரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என போராட்டக்காரர்கள் உறுதியாக நின்றதை அடுத்து, கோயில் இணை‌ ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: இந்து திருக்கோயில்களின் மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் - தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு கோரிக்கை

Last Updated : Aug 5, 2023, 4:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.