ETV Bharat / state

"முதலமைச்சர் ஸ்டாலின் வாயால் வடை சுடுகிறார்" - பி.ஆர்.பாண்டியன் ஆதங்கம்

திருச்சியில் குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு குமரி முதல் டெல்லி வரை விவசாயிகள் நெடுந்தூர பயணம் மேற்கொள்ளப் போவதாக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர் பாண்டியன் தெரிவித்தார்.

"முதலமைச்சர் வாயால் வடை சுடுகிறார்" - விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன்

author img

By

Published : Jan 19, 2023, 11:47 AM IST

பி.ஆர்.பாண்டியன் ஆதங்கம்

திருச்சி: தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்ட மாநில தலைவர் பி.ஆர். பாண்டியன் அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் விளைபொருட்களுக்கு இரட்டிப்பு லாபம் தருவதாக வாக்குறுதியை அளித்து வெற்றி பெற்றார்.

ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. விவசாயிகள் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு ஓராண்டு காலம் டெல்லியில் போராட்டம் நடத்தினார்கள். அப்போது குறைந்தபட்ச ஆதார விலை வழங்க குழு அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதை நம்பி போராட்டத்தை திரும்ப பெற்று ஓராண்டு காலம் ஆகியும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வரும் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆதார விலைக்கான அறிவிப்பு வெளியிட வேண்டும். இல்லையெனில் வருகிற மார்ச் 1ஆம் தேதி தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பினர் குமரி முதல் டெல்லி வரை மத்திய அரசிடம் நீதி கேட்டு நெடுந்தூர பயணம் மேற்கொள்வோம்.

இதில் பயணம் செல்லும் வழியில் உள்ள 12 மாநில முதலமைச்சர்களை சந்திக்க இருக்கின்றோம். அதேபோன்று தமிழ்நாடு முதலமைச்சரும் தேர்தல் வாக்குறுதியில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 வழங்குவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் இன்றைய தினம் வரை வழங்கவில்லை. இப்போது மூன்றாவது பருவ நெல் கொள்முதல் தொடங்கிவிட்டது. ஆகவே குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,000 வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பது தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு செய்யும் துரோகம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சதிஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தின் புதிய அப்டேட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.