திருச்சி மாவட்ட இஸ்லாமிய இயக்கங்கள், மஹல்லா ஜமாத்துகள் அரசியல் கட்சிகள், கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து நீதிமன்றம் நோக்கி பேரணி நடந்தது. பேரணியை இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹபீபுர் ரஹமான் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் அணிவகுத்துச் சென்றனர். இந்த பேரணியை தமுமுக, மமக, மஜக, த.ம.ஜ.க மஜ்லிஸ் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பேரணிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பேரணியில் தேசியக் கொடிகளை ஏந்தி சென்றனர். பேரணி கோஹினூர் தியேட்டர் சிக்னலிலிருந்து தொடங்கி சாஸ்திரி ரோடு, தென்னூர் உழவர் சந்தை வழியாக நீதிமன்றம் எம்.ஜி.ஆர் சிலையை வந்தடைந்தது.
அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆயிரக்கணக்கான கருப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. பேரணியில் இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து குடும்பம் குடும்பமாக பேரணி