திருச்சி: துவாக்குடி நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. கடந்த 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் வார்டுகள் வரையறை செய்ததில் பல குளறுபடிகள் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக துவாக்குடி நகராட்சி நிர்வாகம் பொதுமக்களிடம் எந்தவித கருத்தும் கேட்காமல் ஒன்றாவது வார்டை 21ஆவது வார்டு எனவும்; 21ஆவது வார்டை ஒன்றாவது வார்டு என்றும் மாற்றியுள்ளது.
இதன் காரணமாக ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றில் வார்டு எண்ணை மாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனைக் கண்டித்து பொதுமக்கள், அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் துவாக்குடி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: கார் கண்ணாடியை உடைத்த 2 இளைஞர்கள் கைது