ETV Bharat / state

''சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வரவேண்டும் என்ற EPS-யின் ஆசை நிறைவேறாது'' - trichy mahatma gandhi govt hospital

''சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வரவேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமியின் ஆசை. ஆனால், அது ஒரு போதும் நிறைவேறாது'' என திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் புதிய இயந்திரங்கள் துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்குபெற்ற நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு பேசியுள்ளார்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் புதிய இயந்திரங்கள் துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்குபெற்ற நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு

author img

By

Published : Apr 4, 2023, 6:52 PM IST

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் புதிய இயந்திரங்கள் துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்குபெற்ற நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் புதிய இயந்திரங்கள் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு ரூ. 29 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மின் தூக்கி (LIFT),ரூபாய் 47 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள திரவ பிராணவாயு கொள்கலன் (LIQUID OXYGEN TANK) மற்றும் ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி நோய் எதிர்ப்பு குருதி பகுப்பாய்வு (BLOOD GROUP AND ANTIBODIES ANALYSER) இயந்திரங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் நேரு, கண்காணிப்பாளர் மருத்துவர் அருண், உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் கே.என்.நேரு வரவிருக்கும் பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

அப்போது பேசிய அவர், ''தமிழ்நாட்டில் வார்டுகள் மறுவரையறை, மாநகராட்சி விரிவாக்கம் ஆகியவற்றை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட உள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்த பின்பு அந்த குழு அமைக்கப்படும். ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சருடன் ஆலோசித்து, அந்த குழு அமைக்கப்பட்டு வார்டுகள் மறுவரையறை செய்யப்படும். மெட்ரோ ரயில் திட்ட ஆய்வு பணிக்காக, திருச்சியில் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மெட்ரோ ரயில் ஆய்வு பணிகள் முடிந்த பின்பு உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கும். சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வரவேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமியின் ஆசையாக இருக்கிறது. ஆனால் அது ஒரு போதும் நிறைவேறாது. சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் வழங்கி வருகிறார்.

எனவே, சட்டமன்றத் தேர்தல் எந்த தேதியில் வர வேண்டுமோ அந்த தேதியில் தான் நடக்கும். நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத்தில் தேர்தல் வருமா என்கிற கேள்விக்கே இடமில்லை. தி.மு.க-வில் 2 கோடி பேரை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என செயல்பட்டு வருகிறோம். அது சாத்தியம் தான்.

முன்னதாக, திருச்சியில் புதிய காவிரிப் பாலம் அமைப்பதற்கு, மத்திய அரசு அலுவலகம் ஒன்றை அகற்ற வேண்டி உள்ளது. அவர்களுடன் பேசி அது அகற்றப்பட்டு பின்பு, புதிய காவிரி பாலப்பணிகள் தொடங்கும். திமுக ஆட்சியில் திருச்சி புறக்கணிக்கப் படவில்லை. மற்ற மாவட்டங்கள் பொறாமைப்படும் அளவிற்கு திருச்சிக்கு பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் கொடுத்திருக்கிறார்’’ என்று புகழாரம் சூட்டினார்.

''20 மாத தி.மு.க ஆட்சியில் ரூ.3000 கோடி அளவிற்கு திட்டங்கள் திருச்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 10 ஆண்டுகள் ஆட்சி செய்த அ.தி.மு.க திருச்சிக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால், பல கோடி மதிப்பிலான திட்டங்களை தி.மு.க அரசு செய்து வரும் நிலையில் ஊடகங்கள் தான் திருச்சி புறக்கணிக்கப்படுவதாக விமர்சனங்கள் செய்கின்றன.

திருச்சி ஒருபோதும் புறக்கணிக்கப்படாது, திருச்சியை முதலமைச்சர் நேசிப்பவராக இருக்கிறார். மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு திருச்சிக்கு நிதியை முதலமைச்சர் வழங்குகிறார்'' என புறக்கணிப்பிற்கான விமர்சனங்களை மறுத்து செய்தியாளர்களிடம் கூறினார்.

இதையும் படிங்க: புதிய நிலக்கரி சுரங்க ஆய்வை கைவிடவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும்.. டிடிவி தினகரன் எச்சரிக்கை..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.