கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூடு சம்பவத்தை எதிர்த்துப் போராடிய போராளி முகிலன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியதையடுத்து, இன்று சிறையிலிருந்து விடுதலையாகி வெளியில் வந்தார்.
அப்போது சிறை வாசலில் செய்தியாளர்களிடம் பேசிய முகிலன், "ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஒரு மிகப்பெரிய படுகொலையைப் பட்டப்பகலில் நடத்தியுள்ளார்கள். ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பான கேமரா பதிவுகளைக் கொண்டு ஆவணப்படம் வெளியிடப்பட்டது. ஆனால் இந்தப் படுகொலையை அரங்கேற்றிய காவல்துறையினர் மீது இன்று வரை எந்த நடவடிக்கையும் இல்லை.
இதற்காக குரல் கொடுத்ததற்காக என்னைக் கடத்தி சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தினர். தமிழக மக்களின் தொடர் போராட்டம் காரணமாக நான் உயிரோடு இருக்கிறேன். போலீசார் எத்தகைய அடக்குமுறையைக் கையாண்டாலும் எனது போராட்டங்கள் தொடரும்’ என்று கூறினார்.
இதையும் படிங்க: தேச துரோக வழக்கை கண்டு அஞ்சவோ, பின்வாங்கவோ மாட்டேன்..! - முகிலன்