ETV Bharat / state

காவலரை இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு குற்றவாளிகள் தப்பியோட்டம் - miscreants attack police with iron rod at trichy

திருச்சி: குற்றவாளியை பிடிக்க முற்பட்ட காவலர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு குற்றவாளிகள் தப்பியோட்டம்

author img

By

Published : Jan 22, 2021, 11:50 AM IST

திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் விஜய் (23). இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால் தனிப்படை காவல் துறையினர் விஜய்யை தேடி வந்தனர்.

இந்ந நிலையில் பாலக்கரை காவல் நிலையத்தில் பணியாற்றிவரும் தனிப்படையைச் சேர்ந்த முதல் நிலை காவலர் வேல்முருகன் தனது இருசக்கர வாகனத்தில் சங்கிலியாண்டபுரத்தில் இருந்து எடமலைப்பட்டி புதூரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார்.

அவ்வழியாக நம்பர் பிளேட் இல்லாத இருச்சக்கர வாகனத்தில் விஜய் வந்துகொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் இரு நபர்கள் அமர்ந்து இருந்தார்கள். விஜய் வண்டியில் வருவதை பார்த்த காவலர் வேல்முருகன் அவருடைய வாகனத்திற்கு முன்னால் தனது வாகனத்தை நிறுத்தி மறியல் செய்ய முயற்சி செய்தார். அப்போது விஜய்யின் வண்டியில் இருந்த நண்பர்களில் ஒருவர் தன்னிடம் மறைத்து வைத்திருந்த இரும்பு ராடை கொண்டு வேல்முருகன் தலையில் பலமாக அடித்தார்.

இதில் வேல்முருகனுக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து விஜய்யும் அவரது நண்பர்களும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். வேல்முருகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து பாலக்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவருகின்றனர். காவலர் தாக்கப்பட்ட சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க... கைது செய்த நபரிடமே கைவரிசை காட்டியப் பெண் காவல் ஆய்வாளர்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.