ETV Bharat / state

‘போலியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டால் உடனடி நடவடிக்கை’ - அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை! - Minister of Municipal Administration

திருச்சியில் தில்லை நகர் மாநகராட்சி வணிக வளாக தரைத்தளத்தில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள சார்பதிவகத்தை இன்று (ஜூன் 29) பத்திரப்பதிவுத்துறை‌ அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.

minister moorthy
சார்பதிவகம்
author img

By

Published : Jun 29, 2023, 10:38 PM IST

சார்பதிவகத்தை திறந்து வைத்த அமைச்சர் மூர்த்தி

திருச்சி: தில்லை நகர் 7ஆவது குறுக்குத்தெருவில் மாநகராட்சி வணிக வளாக தரைத்தளத்தில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள சார்பதிவகம் இன்று (ஜூன் 29) நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை‌ அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.

விழாவிற்கு பின்னர் வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “திருச்சி தில்லைநகர் பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரின் பெரு முயற்சியால் நகரின் மையப்பகுதியில் பொதுமக்கள் வந்து செல்வதற்கு எளிதாகவும், போக்குவரத்து வசதி மிகுந்த நகரின் மையப்பகுதியில் அமையப்பெற்றுள்ளது.

பதிவுத்துறை பொறுத்தவரை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு எட்டாயிரம் கோடி கூடுதலாக கொடுத்துள்ளனர், 26 ஆயிரம் கோடி அரசு நிர்ணயித்துள்ளது. வருவாயை கூட்டுவதற்கான முயற்சியில் உள்ளோம். இடை தரகர்கள் ஆவண எழுத்தர்கள் அவர்கள் இடத்தைத் தவிர மற்ற இடங்களுக்கு வரக்கூடாது என கூறுவது வதந்திகளை தவிர்ப்பதற்காக தான்” என தெரிவித்தார்.

மேலும், “தவறாக பதிவுகள் செய்யப்பட்டு ஆதாரம் நிரூபிக்கப்பட்டால் உடனடியாக அது ரத்து செய்யப்படும்” என்ற அறிவிப்பை தெரிவித்தார். இந்த திறப்பு விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பழனியாண்டி, காடுவெட்டி தியாகராஜன், ஸ்டாலின் குமார் மற்றும் பத்திரப்பதிவுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க:Senthil Balaji Dismiss: செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியிலிருந்து டிஸ்மிஸ் - ஆளுநர் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.