ETV Bharat / state

அரசு பள்ளி மாணவர்களுடன் காலை உணவருந்திய உதயநிதி ஸ்டாலின்! - திருச்சி அரசு சையது முதுர்சா பள்ளி

திருச்சி அரசு பள்ளியில், காலை உணவுத்திட்டம் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளி மாணவர்ளுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார்.

பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய உதயநிதி ஸ்டாலின்

author img

By

Published : Jun 19, 2023, 3:23 PM IST

பள்ளி மாணவர்களுடன் காலை உணவருந்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

திருச்சி: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருச்சி மரக்கடை பகுதியில் அமைந்து உள்ள அரசு சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தையும் பார்வையிட்டு உணவின் தரம் சரியாக இருக்கிறதா?, மாணவர்களுக்குச் சரியான அளவில் உணவு வழங்கப்படுகிறதா? என்பதைக் குறித்து ஆய்வு செய்தார்.

பின்பு அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் உணவு முறைகளைப் பற்றிக் கேட்டு அறிந்தார். அவர்களிடம் குழந்தைகள் சாப்பிடும் உணவு ஆகையால் சுத்தமாகவும், தரமானதாகவும் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். பின், பள்ளியின் கழிவறை சுகாதாரமான முறையில் உள்ளதா? என்பதைக் குறித்து ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "நான் தமிழ்நாட்டில் எந்த மாவட்டம் மற்றும் எந்த ஊருக்குச் சென்றாலும் முதலில் மாணவர்களுக்காக, தமிழ்நாடு முதல்வர் அறிவித்த காலை உணவுத் திட்டத்தைத் தான் ஆய்வு செய்வேன்.மேலும் எனக்குக் காலை உணவை, பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிடுவது வழக்கம். என்ன தான் வீட்டில், வெளியில் சாப்பிட்டாலும் மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிடுவது தான் எனக்குத் தனி மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.

மேலும், மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிடும் போது அவர்களின் வாழ்க்கை முறை, குடும்ப சூழ்நிலை, கல்வி முறை போன்றவற்றைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்வேன். குறிப்பாக பள்ளிகளில் காலை உணவு சரியான நேரத்தில் வழங்கப்படுகிறதா?, ஆசிரியர்கள் சரியான முறையில் கல்வி கற்று தருகிறார்களா? என்பதைக் குறித்து ஆய்வு செய்த பிறகு தான், நான் எனது பணியை தொடங்குவேன்” என்றுக் கூறினார்.

மேலும் பேசிய அவர், "திருச்சி அரசு சையது முதுர்சா பள்ளியில் ஆய்வு செய்தேன். எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் பள்ளிக்கல்வி துறைக்கு பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதல்வர் செயல்படுத்தி வருகிறார். ஆகையால் மாணவர்கள் தங்களின் கவனத்தை சிதறவிடாமல், கல்வியை மட்டும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். மாணவர்களுக்கு தாயாகவும், தந்தையாகவும் இருந்து இந்த அரசு உறுதியாக செயல்படும்.

மேலும், தமிழ்நாட்டு மாணவர்களின் நலனுக்காக இந்த அரசு தொடர்ந்து செயல்படும். மாணவர்கள் எதையும் பற்றி சிந்திக்காமல், கல்வியை மட்டும் கற்கவேண்டும். வருங்காலத்தில் நீங்கள் ஒரு ஆசிரியர், தொழிலதிபர் ஆக வேண்டும். குறிப்பாக இந்தியாவே உங்களை திரும்பி பார்க்கும் அளவிற்கு வளர வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த ஆய்வில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: அண்ணாமலை ஒருவர் போதும் பாஜகவிற்கு சமாதி கட்ட!:புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.