ETV Bharat / state

'குப்பைகளை வைத்து மின்சாரம் தயாரிப்போம்..!' - அமைச்சர் கே.என்.நேரு - kn nehru inspections

திருச்சியில் பல்வேறு இடங்களில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

’குப்பைகளை வைத்து மின்சாரம் தயாரிப்போம்..!’ - கே.என்.நேரு

author img

By

Published : May 20, 2022, 9:01 PM IST

திருச்சி: தமிழ்நாட்டின் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று(மே 20) காலை 6.45 மணிக்கு திருச்சி பிராட்டியூர் ஆர்.டி.ஓ அலுவலகம் அருகில் உள்ள புங்கனூர் அரியாறு ஆற்றில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து காலை 7.15 மணி அளவில் கருமண்டபம் பாலத்தில் இருந்து கோரையாற்றில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு, அலுவலர்களுக்கு சில அறிவுரைகளையும் வழங்கினார்.

’குப்பைகளை வைத்து மின்சாரம் தயாரிப்போம்..!’ - கே.என்.நேரு

பின்னர் புத்தூர் நால் ரோடு வழியாகச் சென்று காலை 7.50 மணியளவில் வயலூரில் உள்ள உய்யகொண்டான் பாலத்தில் இருந்து குடமுருட்டி ஆற்றினைத் தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து காலை 8 மணியளவில் பாத்திமா நகர் வழியாகச் செல்லும் குடமுருட்டி ஆற்றில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார்.

மீண்டும் காலை 8.15 மணியளவில் கம்பரசம்பேட்டை கொடிங்கால் வாய்க்கால் தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வுகளில், திருச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் மணிவாசகன், மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி, மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் , மாநகராட்சி ஆணையர், கோட்டத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உள்பட பலர் உடனிருந்தனர்.

ஆய்வுக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திருச்சி மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் தற்போது 70 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. குறுகலான பகுதிகள் அகலப்படுத்தப்பட்டு இன்னும் 10 தினங்களில் பணிகள் நிறைவுபெறும். தமிழகத்தில் சேரும் குப்பைகளை அந்த இடத்திலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து மக்காத குப்பைகளை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் பணியில் ஈடுபடவுள்ளோம்.

இந்தியாவிலேயே சிறப்பான முறையில் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிப்பதில் இந்தூர் சிறந்து விளங்குகிறது. தற்போது நகர்ப்புற துறைச் செயலாளர் அதனைப் பார்வையிட இந்தூர் சென்றுள்ளார். இந்தூரை முன்மாதிரியாகக் கொண்டு இந்த ஊரில் குப்பைகளை கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: டிஜிபி தலைமையில் ஆய்வு கூட்டம் : மலைக்கோட்டை மாநகரிலா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.