ETV Bharat / state

சென்னைக்கு இணையாக திருச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முதல்வர் - கே.என்.நேரு பெருமிதம்! - Tamilnadu politics

திருச்சியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர் கே.என்.நேரு, 10 ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்தும் தொகுதிக்கு எதுவும் செய்ய முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

10 ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்தும் எதுவும் செய்ய முடியவில்லை - அமைச்சர் கே.என்.நேரு

author img

By

Published : Jan 6, 2023, 1:16 PM IST

திருச்சியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்த பின்னர் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

திருச்சி: மாநில நிதிக்குழுவில் இருந்து ரூ.5 கோடி செலவில் காவேரி ஆறு அய்யாளம்மன் படித்துறை அருகே புதிதாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (ஜன.6) திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "10 ஆண்டு காலம் செய்ய முடியாததை, தற்போது மக்களின் வேண்டுகோளை ஏற்று நிறைவேற்றி உள்ளோம். நான் சட்டமன்ற உறுப்பினராக கடந்த 10 ஆண்டுகள் இருந்தபோது, எந்த திட்டமும் செயல்படுத்த முடியவில்லை. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகரங்களையும் முன்னேற்றும் வகையில் முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் திருச்சியில் பல்வேறு திட்டப்பணிகளுக்கும் உடனடி அனுமதி வழங்கி வருகிறார்.

எனவேதான் புதிய சுத்திகரிப்பு நிலையத்துக்கும் அனுமதி வழங்கி, அது தற்போது திறந்து வைக்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு 135 லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லும் நோக்கில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து அனைத்து வசதிகளுடன் கூடிய கழிவறைகளை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மற்ற நகரங்களைக் காட்டிலும், திருச்சி மாநகரம் சிறப்பான நகரமாக அமைய வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் சென்னையை கவனிப்பதுபோல, திருச்சியையும் கவனித்து வருகிறார். திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் உள்ள 520 ஏக்கர் நிலம் வளர்ச்சித் திட்டத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அவை வருவாய் ஈட்டும் முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பஞ்சப்பூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், மார்க்கெட், வணிக வளாகம் ஆகியவற்றுக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதன் அருகிலேயே 200 ஏக்கர் பரப்பளவில் ஒலிம்பிக் மைதானம் அமைக்கப்பட உள்ளது” என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: உதயநிதி குறித்த கேள்விக்கு கோபப்பட்ட அமைச்சர் கே.என்.நேரு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.