ETV Bharat / state

பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கிய அமைச்சர்

திருச்சி: மாநகராட்சியில் இரண்டு வார்டு மக்களுக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிவாரணம் வழங்கினார்.

பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கிய அமைச்சர்
பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கிய அமைச்சர்
author img

By

Published : May 5, 2020, 1:11 PM IST

Updated : May 5, 2020, 8:23 PM IST

கரோனா தொற்று தாக்குதலை கட்டுப்படுத்தும் வகையில் மே 17ஆம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் திருச்சி மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்தில் இருப்பதால் கட்டுப்பாடுடன் கூடிய தளர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கூலித்தொழிலாளர்கள் பலர் வேலையின்றியும், வருமானமின்றியும் அவதிப்பட்டுவருகின்றனர். அவர்களுக்கு அரசு சார்பிலும், அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும் உணவு பொருள்கள், காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருள்களை தொடர்ந்து வழங்கிவருகின்றனர்.

அந்த வகையில் இன்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். திருச்சி மாநகராட்சி 13, 23 ஆகிய 2 வார்டு மக்களுக்கு அரிசி, காய்கறி, கீரைகள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. கரோனா நோய் தொற்றை எதிர்க்கும் வகையில் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலான கீரை உள்ளிட்ட காய்கறிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியின்போது கட்சி பிரமுகர்கள் ஜவகர், மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன், வழக்குரைஞர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நிவாரண பொருள்களை வாங்க வந்த மக்கள் முகக்கவசம் அணிந்து வர அறிவுரை வழங்கப்பட்டது. அதேபோல் தகுந்த இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க: கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் உணவைப் பாராட்டிய மத்தியக்குழு!

Last Updated : May 5, 2020, 8:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.