ETV Bharat / state

தண்ணீர் பிரச்னையைத் தீர்க்காவிட்டால் வெளிநாடுகளிடம் கையேந்தும் நிலை ஏற்படும்: மேதாக் பட்கர் - Methak Patkar

திருச்சி: தண்ணீர் பிரச்னையைத் தீர்க்காவிட்டால் வெளிநாட்டிலிருந்து கப்பலில் தண்ணீர் வாங்கும் நிலை ஏற்படும் என சூழலியல் போராளி மேதா பட்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தண்ணீர் பிரச்னை
author img

By

Published : Jun 22, 2019, 11:53 PM IST

திருச்சியில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் சூழலியல் போராளி சூழலியல் போராளி மேதா பட்கர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘தண்ணீர் பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் வெளிநாடுகளில் இருந்து கப்பலில் தண்ணீர் வாங்க வேண்டிய சூழல் உருவாகும். நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேதா பட்கர் செய்தியாளர் சந்திப்பு

கேரள அரசு கொடுக்க முன்வந்த தண்ணீரை தமிழ்நாடு அரசு வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. வேறு கட்சி ஆட்சி நடக்கிறது என்பதால் இந்த முடிவை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. மக்களின் தண்ணீர் பிரச்னையில் அரசியல் பார்க்கக்கூடாது. நான்கு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். போராட்டங்கள் அமைதியாக நடந்து வருகிறது. ஆனால் அரசு அவற்றை தீர்க்க முன்வரவில்லை.

தேர்தலில் மக்களின் பிரச்னைகள் குறித்து யாரும் எடுத்துக் கூறவில்லை. தற்போது நாட்டில் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் என அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 93% சதவிகித அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பற்ற தொழிலாளர்களாகத் தான் உள்ளனர்.

சூழலியல் போராளி முகிலன் மாயமாகி விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் கடத்தப்பட்டுள்ளார் என்பதுதான் உண்மை” என்று தெரிவித்தார்.

Intro:சூழலியல் போராளி மேதாக் பட்கர் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

Body:திருச்சி: நீர்நிலைகளை பாதுகாக்காவிட்டால் வெளிநாட்டில் இருந்து கப்பலில் தண்ணீர் வாங்க வேண்டிய சூழல் உருவாகும் என்று சூழலியல் போராளி மேதாக் பட்கர் கூறினார்.
திருச்சியில் நடந்த கல்லூரி நிகழ்ச்சி மற்றும் பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த சூழலியல் போராளி மேதா பட்கர் திருச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் தேர்தலில் மக்களின் பிரச்சினைகள் குறித்து யாரும் எடுத்துக் கூறவில்லை. பிரச்சினைகள் காரணமாக இந்திய மக்கள் திருப்தியாக இல்லை. தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் என அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரங்கள் பாதித்துள்ளது.
நாட்டில் 93 சதவீத அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பற்ற தொழிலாளர்களாக தான் உள்ளனர். நாட்டை கட்டமைக்கும் தொழிலாளர்கள் சேரிகளில் வசிக்கின்றனர். அதையும் நீர் நீர் வழித்தடம் என்று கூறி அகற்றும் பணிகளில் ஈடுபடுகின்றனர். பெரிய பெரிய கட்டிடங்கள் எல்லாம் நீர்நிலைகளை ஆக்கிரமித்து உள்ளது. ஆனால் அவற்றை எல்லாம் அகற்றப்படுவது கிடையாது. கேரளா அரசு கொடுக்க முன்வந்த தண்ணீரை தமிழக அரசு வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. வேறு கட்சி ஆட்சி நடக்கிறது என்பதால் இந்த முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது. மக்களின் தண்ணீர் பிரச்சனையும் அரசியல் பார்க்க கூடாது. 4 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். போராட்டங்கள் அமைதியாக நடந்து வருகிறது. ஆனால் அரசு அவற்றை தீர்க்க முன்வரவில்லை. சூழலியல் போராளி முகிலன் மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் கடத்தப்பட்டுள்ளார் என்பதுதான் உண்மை. ஸ்டெர்லைட் விவகாரத்தில் துப்பாக்கிச்சூடு நடந்து உயிர் வலி ஏற்பட்டவுடன் தான் தமிழக அரசு அதற்கு எதிராகச் செயல்பட்டது. தற்போது மீண்டும் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுகிறது. வன்முறைக்கு எதிராக வன்முறை என்பது சரியல்ல. வன்முறை மற்றொரு வன்முறைக்கு தீர்வாகாது. பெரும் தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்கள் வெளிநாட்டு நிதியை பெற்றால் அது தவறு இல்லை. ஆனால் போராளிகள் வெளிநாட்டிலிருந்து நிதி பெற்றால் அது குற்றமாகிறது. தண்ணீர் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் வெளிநாடுகளில் இருந்து கப்பலில் தண்ணீர் வாங்க வேண்டிய சூழல் உருவாகும். அதனால் நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் இயக்கங்கள் வலுவடைய வேண்டும். மத்திய மோடி அரசு 7,000 சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள வாழ்வாதாரத்தை அழிக்கும் பிரச்சனைகளை 38 எம்பி.க்கள நாடாளுமன்றத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றார். கூடங்குள அணுமின் நிலைய போராளி உதயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Conclusion:நீர்நிலைகளில் உள்ள பெரிய பெரிய கட்டடங்களை அகற்ற முன்வரவேண்டும் என்று மேதாக் பட்கர் கூறினார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.