ETV Bharat / state

தொகுதி நலனுக்காக முதலமைச்சரை சந்திப்பேன் - திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி

திருச்சி: ரயில்வே மேம்பாலம், சாலைகள் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றுவதற்காக முதலமைச்சரை விரைவில் சந்திப்பேன் என்று திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்துள்ளார்.

திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி
திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி
author img

By

Published : Jan 28, 2020, 4:56 PM IST

திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் அரசின் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமையில் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கரூர் எம்.பி. ஜோதிமணி, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்குப் பின்னர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றிருக்க வேண்டும். ஆனால் பங்கேற்கவில்லை. இது கட்சிக்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பேசக்கூடிய கூட்டமாகும். இது முதல் கூட்டம். மூன்று மாதத்திற்கு ஒருமுறை இந்தக் கூட்டம் நடைபெறும். ஏற்கனவே நடந்த பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அடுத்தடுத்து ஆய்வுக் கூட்டத்தில் நிறை, குறைகள் குறித்து பேசப்படும்" என்றார்.

தொடர்ந்து, திருச்சியில் நடந்த கொலை சம்பவத்தை பாஜக மத மோதலாக சித்திரிக்கும் செயல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி

அதற்கு அவர், "கொலை எந்தக் காரணத்தால் நடந்தாலும் கொலை கொலைதான். காரணங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எந்தக் கொலையையும் நியாயப்படுத்த முடியாது. அதனால் காரண காரியங்களை ஆய்வுசெய்யாமல் இதுபோன்ற கொலை கொள்ளை சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும். குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்" என்று கூறினார்.

மேலும், திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், மேம்பாலம், சாலைகள் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றுவதற்காக முதலமைச்சரை விரைவில் சந்திக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நாட்டில் பல பிரச்னைகள் இருக்கு, ரஜினி பிரச்னையைப் பத்தி மேலும் பேசாதீங்க' - கடுப்பான திருநாவுக்கரசர்

Intro:திருச்சியில் ரயில்வே மேம்பாலம் சர்வீஸ் ரோடு உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றுவதற்காக தமிழக முதலமைச்சரை விரைவில் சந்திப்பேன் என்று திருநாவுக்கரசர் கூறினார்.Body:திருச்சி:
திருச்சியில் ரயில்வே மேம்பாலம் சர்வீஸ் ரோடு உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றுவதற்காக தமிழக முதலமைச்சரை விரைவில் சந்திப்பேன் என்று திருநாவுக்கரசர் கூறினார்.
திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் அரசின் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இதில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பின்னர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து எம்எல்ஏக்களும் பங்கேற்றிருக்க வேண்டும். ஆனால் பங்கேற்கவில்லை. இது கட்சிக்கு அப்பாற்பட்ட விஷயங்களை பேசக்கூடிய கூட்டமாகும். இது முதல் கூட்டம். மூன்று மாதத்திற்கு ஒருமுறை இந்த கூட்டம் நடைபெறும். ஏற்கனவே நடந்த பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அடுத்தடுத்து ஆய்வு கூட்டத்தில் நிறை, குறைகள் குறித்து பேசப்படும் என்றார். தொடர்ந்து திருச்சியில் நடந்த ஒரு கொலை சம்பவத்தை பாஜக மத மோதலாக சித்தரிக்கும் செயல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு திருநாவுக்கரசர் பதில் கூறுகையில், கொலை எந்த காரணத்தால் நடந்தாலும் கொலை கொலை தான். காரணங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.எந்த கொலையையும் நியாயப்படுத்த முடியாது. அதனால் காரண காரியங்களை ஆய்வு செய்யாமல் இதுபோன்ற கொலை கொள்ளை சம்பவங்கள் தடுக்கப்படவேண்டும். குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். கொலை, கொள்ளை அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு நடமாட்டங்கள் கண்காணிக்கப்பட வேண்டும். கேமராக்கள் பொருத்துவதற்காக எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும். காவலர்களின் எண்ணிக்கையை தமிழகத்தில் அதிகரிக்க வேண்டும். தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் காவலர்கள் மட்டுமே உள்ளனர். நீண்டகாலமாக இதே எண்ணிக்கை தான் இருக்கிறது. வாக்காளர்களே 6 கோடி பேர் உள்ளனர். 8 கோடிக்கும் மேல் மக்கள் தொகை உள்ளது. ஆனால் அதே காவலர்கள் தான் இருக்கிறார்கள். மக்கள் தொகைக்கு ஏற்ப வருடாவருடம் காவலர்கள், காவல் நிலையங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். நவீன எந்திரங்கள், வசதிகள் வாகனங்கள் காவல்துறைக்கு செய்து கொடுக்க வேண்டும். அப்போதுதான் குற்றங்கள் தடுக்கப்படும். குற்றவாளிகள் மத்தியில் அச்சம் ஏற்படும். திருச்சியில் கொலை, கொள்ளைகளை தடுக்க காவலர்கள் முயற்சிக்க வேண்டும். குற்றவாளிகளை கைது செய்து தண்டிக்க வேண்டும் என்றார். திருநாவுகரசர் தொடர்ந்து பேசுகையில், திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், மேம்பாலம், சர்வீஸ் ரோடு, ரயில்வே மேம்பாலம் போன்ற திட்டங்களை நிறைவேற்றுவதற்காக முதலமைச்சரை விரைவில் சந்திப்பேன்.
திருச்சி தமிழகத்தின் மையப்பகுதி. கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு விடிய விடிய பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து திருச்சிக்கு நான்கு மணி நேரத்தில் வந்து விடலாம். சென்னை ஏற்கனவே தலைநகராக உள்ளது. அதை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தவில்லை. சென்னை தற்போது அதிக நெரிசல் ஆகிவிட்டது. அதனால் தமிழக அரசின் முக்கிய துறைகளின் தலைமை அலுவலகத்தை திருச்சியை ஒட்டிய பகுதியில் அமைத்து, திருச்சியை இரண்டாவது தலைநகரம் ஆக்கலாம். திருச்சியில் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளது.
திருச்சி இரண்டாவது தலை நகரம் ஆக்கினால் திருச்சிக்கு மட்டுமல்லாது பல மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதனால் இந்த கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்றார்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.