ETV Bharat / state

'காவல்துறை கரை வேட்டி கட்டிய ஏவல் துறையாக உள்ளது' - ஜோதிமணி கடும் தாக்கு - மணப்பாறை

திருச்சி : மணப்பாறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி காவல்துறை கரை வேட்டி கட்டிய ஏவல் துறையாக செயல்படுகிறது என விமர்சித்துள்ளார்.

ஜோதிமணி
author img

By

Published : Apr 4, 2019, 12:00 PM IST

Updated : Apr 4, 2019, 12:56 PM IST

கரூர் நாடாளுமன்றதொகுதிக்குட்பட்ட மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜோதிமணி, 'கரூர் தொகுதிக்குட்பட்ட அனைத்து ஊர்களிலும் கடுமையான தண்ணீர் பிரச்னை நிலவுகிறது. எனவே, எல்லா கிராமத்திற்கும் தரமான குடிநீர் வழங்குவதை இலக்காக வைத்துள்ளோம். தோல்வி பயம் தெரிவதால் தம்பிதுரை மிகவும் கீழ்த்தரமான செயலை செய்து வருகிறார்.

ஜோதிமணி

இதற்காக நாங்கள் துக்கப்படமாட்டோம், துயரப்படமாட்டோம், நிச்சயமாக 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தம்பிதுரையை தோற்கடிப்பேன். இந்த தேர்தலுடன் தம்பிதுரையின் அரசியல் வாழ்க்கை அஸ்தமிக்க இருக்கிறது. அதனால்தான் அவர் வாக்கு கேட்டு செல்லும் இடத்தில் மக்கள் விரட்டி அடிக்கின்றனர்.

ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் அரசு சார்பில் கொண்டு வரவேண்டிய கல்லூரிகளுக்கு பதிலாக தனக்கு சொந்தமாக 45 கல்லூரி, ஒரு வேளாண் கல்லூரி மற்றும் ஒரு மெடிக்கல் கல்லூரிகளை கட்டி முடித்து பணம் சம்பாதித்து வருகிறார். கரூர் மாவட்டத்தை பொறுத்த வரைக்கும் காவல்துறை கரை வேட்டி கட்டிய ஏவல்துறையாக செயல்படுகிறது.

புதுச்சேரி உட்பட 40 தொகுதியிலும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் கமிஷன் செயல்படுகிறது. இதைச் சொல்ல நான் வருத்தப்படுகிறேன்' என்று அவர் கூறினார்.

Intro:காவல்துறை கரை வேட்டி கட்டிய ஏவல்துறை - கரூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கடும் தாக்கு.

Body:கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அவர் பொதுமக்களிடம் பேசுகையில் :
மோடி ஆட்சி அகற்றப்பட்டு,பிரதமர் ராகுல் காந்தி அவர்கள் தலைமையில்,தளபதி அவர்கள் ஆதரவில் அமையவிருக்கும் அரசு சாதாரண ஏழை எளிய மக்களுக்கான அரசாக இருக்கும்.5 சவரன் வரை கடன் வாங்கியவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும்.தண்ணீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் இலவச திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்.

இதனையடுத்து செய்தியாளரிடம் பேசுகையில்:
கரூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தீவிரமாக வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறோம். எல்லா ஊர்களிலும் கடுமையான தண்ணீர் பிரச்சினை நிலவுகிறது.தம்பி அவர்கள் மூன்று மாதம் முன்னர் வரை எந்தப் பகுதிக்கும் வரவில்லை இது மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.அவர் வாக்கு கேட்டு ஊருக்குள் வரக்கூடாது என அவரை விரட்டியடிக்கக் கூடிய காட்சியை காண முடிகிறது.எல்லா கிராமங்களிலும் குடிநீர் வசதி இல்லாமல் இருப்பதால் அனைத்து கிராமத்திற்கும் தரமான குடிநீர் வழங்குவதை இலக்காக வைத்துள்ளோம்.தோல்வி பயம் தெரிவதால் தம்பிதுரை மிகவும் கீழ்த்தரமான நடவடிக்கையில் இயங்குகிறார். இதையெல்லாம் பார்த்து நாங்கள் அச்சப்பட மாட்டோம் நிச்சயமாக 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தம்பித்துரை அவர்களை தோற்கடிப்பேன். தம்பிதுரை அவர்களின் அரசியல் வாழ்க்கை அஸ்தமிக்கும்.ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் கல்லூரிகளை கொண்டு வரவேண்டிய தம்பித்துரை 45 கல்லூரிகளை சொந்தமாக கட்டி சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.ஒரு வேளாண் கல்லூரி கட்டியிருக்கிறார்,ஒரு மெடிக்கல் கல்லூரி கட்டி முடிக்கப்பட்டு 300 சீட்டுகளோடு அனுமதிக்காக காத்திருக்கிறது.மக்களிடம் கொள்ளையடித்த பணத்தில் நியாயமாக கரூர் பாராளுமன்ற தொகுதியில் மணப்பாறை,விராலிமலை, அரவக்குறிச்சி,வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்க வேண்டிய கலை கல்லூரிகளை திருடிக் கொண்டுபோய், மக்களிடம் சம்பாதித்த பணத்தை கொண்டு சொந்தமாக கட்டியிருக்கிறார்.கரூர் மாவட்டத்தை பொறுத்த வரைக்கும் காவல்துறை கரை வேட்டி கட்டிய ஏவல்துறையாக செயல்படுகிறது.தேர்தல் அவசரம் வாகனம் எங்கள் பின்னால் மட்டுமே செல்கிறது நாங்கள் சாதாரணமாக எளிமையாக முறையில் வாக்கு சேகரிக்க செல்கிறோம்.புதுச்சேரி உட்பட 40 தொகுதியிலும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் கமிஷன் செயல்படுகிறது இதைச் சொல்ல நான் வருத்தப்படுகிறேன் இவ்வாறு தெரிவித்தார்.

Conclusion:
Last Updated : Apr 4, 2019, 12:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.