ETV Bharat / state

சித்திரை திருவிழா சிறப்பு வீதியுலா-பக்தர்களுக்கு மத்தியில் மிதந்து சென்ற வேப்பிலை மாரியம்மன். - திருச்சி

திருச்சி, மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் பிரதான நிகழ்சியான வேப்பிலை மாரியம்மன் குதிரை வாகனத்தில் வீதியுலா வரும் வேடபரி நிகழ்ச்சி நடைபெற்றது.

சித்திரை திருவிழா சிறப்பு வீதியுலா-பக்தர்களுக்கு மத்தியில் மிதந்து சென்ற வேப்பிலை மாரியம்மன்.
சித்திரை திருவிழா சிறப்பு வீதியுலா-பக்தர்களுக்கு மத்தியில் மிதந்து சென்ற வேப்பிலை மாரியம்மன்.சித்திரை திருவிழா சிறப்பு வீதியுலா-பக்தர்களுக்கு மத்தியில் மிதந்து சென்ற வேப்பிலை மாரியம்மன்.
author img

By

Published : May 17, 2022, 8:16 AM IST

திருச்சி, மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 1ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது.திருவிழாவின் பிரதான நிகழ்ச்சியாக வேப்பிலை மாரியம்மன் குதிரை வாகனத்தில் வீதியுலா வரும் வேடபரி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் பரம்பரை அறங்காவலர் வீரமணி தலைமையில் காட்டு முனியப்பன் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க படுகளம் புறப்பட்டு வேப்பிலை மாரியம்மன் கோவில் வந்தடைந்து,அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் வேப்பிலை மாரியம்மன் சூலாயும் ஏந்தி அமர்ந்திருக்க மணப்பாறை பட்டி கிராமத்தினர் வாகனத்தை ராஜ வீதிகளின் வழியாக சுமந்து சென்று வேடபரி மீண்டும் கோவிலை வந்தடைந்தது. அப்போது வழி முழுவதும் குதிரை வாகனம் மீது பூக்களை தூவி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

வேடபரி கோவிலில் இருந்து புறப்பட்டதும் நகரில் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து கோவிலுக்கு வந்தனர்.முன்னதாக அதிகாலையிலிருந்து நண்பகல் வரை ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து அக்னி சட்டி எடுத்தும்,அலகு குத்தியும் அம்மனுக்கு நேர்த்திகடன் செலுத்தினர்.

இதையும் படிங்க: TODAY HOROSCOPE: மே 17 - இன்றைய ராசிபலன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.