கரோனா தொற்றின் பரவலால் இந்தியாவில் கடந்த இரண்டு வாரங்களாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து கரோனா குறித்து விழிப்புணர்வுகளை மக்களிடையே அரசுகள் ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை-கோவில்பட்டி சாலையில் அமைந்துள்ள பால் கூட்டுறவு சங்கத்தில் இன்று காலை பால் வாங்க வந்த பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் அங்கு விற்கப்பட்ட டீ, வடையை வாங்க அலைமோதினர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி தன்னார்வலர் ஒருவர் சோதனைச்சாவடி மையத்திலிருந்த காவலர்களிடம் தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
அதனையடுத்து, அங்கு விரைந்த காவல் துறையினர், கூட்டம் கூட்டமாக நின்ற பொதுமக்களிடம் அறிவுரைகள் கூறியும், எச்சரித்தும் அனுப்பினர்.