திருச்சி: தமிழ்நாட்டில் சக்தி(அம்மன்) ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மகா மாரியம்மன் கோயில். இந்த திருக்கோயிலுக்குத் தமிழ்நாடு மட்டுமல்லாது வெளி மாநிலங்களிலிருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து தங்களது நேர்த்திக் கடனை செல்வார்கள். இந்நிலையில் சமயபுரம் அருள்மிகு மகா மாரியம்மன் கும்பாபிஷேகம் முடிந்து 6 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு ஸம்வத்சராபிஷேகம் மற்றும் மகா நவசண்டி ஹோமம் இன்று கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் நடைபெற்றது.
மேலும், வியாழக்கிழமை மாலை சமயபுரம் மாரியம்மன் கோவில் 10 -க்கும் மேற்பட்ட குருக்கள் மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணிவரை விக்னேஷ் பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தேவி ஆவாஹனம், பைரவர் பலி மற்றும் மகா தீபாரதனை ஆகியவை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், மகாசண்டி ஹோமம், மகா பூர்ணாஹூதியும் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து திரவிய பூஜைகளுடன் மாரியம்மன் கோயில் வளாகத்திலிருந்து கடகங்கள் புறப்பட்டு சமயபுரம் மாரியம்மன் உற்சவர் அம்மனுக்குப் புனித நீர் ஊற்றி மகா தீபாரதனை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு "ஓம் சக்தி பராசக்தி.. ஓம் சக்தி பராசக்தி” என்று சரண கோஷத்துடன் அம்மாளை தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: சென்னை ஏர்போர்ட்டில் விமானங்கள், பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு!