கரோனா தடுப்பு நடவடிக்கைள் தொடர்பாக திருச்சி வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார். அங்கு அமைக்கப்பட்ட படுக்கை வசதிகள் கொண்ட சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
- நம்பிக்கை வைத்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி.
- வாழ்த்து தெரிவிக்க வந்த அலுவலர்களிடம் கரோனா தடுப்பு குறித்தே விவாதித்தேன்.
- கரோனா தடுப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
- கரோனா சிகிச்சைக்கான தகவல்களைப் பெற 'வார் ரூம்' அமைக்கப்பட்டுள்ளது.
- மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதால் தமிழ்நாட்டிற்கு கூடுதல் ஆக்ஸிஜன் கிடைத்துள்ளது.
- 2.7 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
- கரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள அனைத்துக் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் குழு அமைக்கப்படும்.
- சென்னையைப் போன்று பிற மாவட்டங்களில் 'வார் ரூம்' அமைக்க யோசித்து வருகிறோம்.
- தடுப்பூசி, ஆக்ஸிஜன் ஆகியவற்றை தமிழ்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- ஊரடங்கை நீடிப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்படும்.
- ஊரடங்கு மூலம் தொற்று பரவும் வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- மே 2ஆம் தேதி முதல் கரோனா தடுப்புப் பணிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
- கலைஞர் பிறந்த நாளுக்கு முன்பாக கரோனா நிவாரணத்தின் 2ஆம் தவணை ரூ.2 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- ஆட்சியமைத்து 2 வாரங்களில் 16,938 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
- கரோனா இல்லை என்று சொல்லும் நாளே நமக்கு மகிழ்ச்சியான நாள்.
- கரோனா தடுப்பிற்காக 2,500 மருத்துவர்கள், 6 ஆயிரம் செவிலியர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- போர்க்கால அடிப்படையில் திமுக அரசு இயங்குகிறது.
- அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
- ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- தமிழ்நாடு அரசு கேட்கும் உதவிகளை செய்வதற்காக ரயில்வே துறை அமைச்சரை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.
- ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் ஆம்புலன்சில் காத்திருக்கும் நிலையை குறைக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- கரோனா காரணமாக பிரதமரை சந்திக்க முடியவில்லை; பின்னர் அவரைச் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்துவேன்’ இவ்வாறு செய்தியாளர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இதையும் படிங்க: 'முதலமைச்சருக்கு நன்றி' - ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தினர் உருக்கம்!