ETV Bharat / state

கதண்டு கடித்து லாரி ஓட்டுநர் உயிரிழப்பு

திருச்சி: சிலையாத்தி பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ராஜாராம் கதண்டு கடித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

lorry driver died in trichy after insect bites

author img

By

Published : Nov 29, 2020, 12:55 PM IST

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சிலையாத்தியைச் சேர்ந்தவர் ராஜாராம் (51). லாரி ஓட்டுனரான இவர் கொள்ளிடம் ஆற்றங்கரையில் இயற்கை உபாதை கழிப்பதற்காக நேற்று சென்றுள்ளார். அப்போது அவரை கதண்டுகள் திடீரென்று சூழ்ந்து கடித்துள்ளன.

இதனால் வலி தாங்காமல் அலறி துடித்த ராஜாராம் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று ராஜாராமனை மீட்டு சிறுகாம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாத்தலை காவல் நிலையத்தினர் விரைந்து சென்று ராஜாராம் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: உயிரைப் பறிக்கும் கதண்டு வண்டு! நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.