பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 26ஆம் தேதிமுதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. தற்போது பகல்பத்து நிகழ்வு நடைபெற்றுவருகிறது.
இதை முன்னிட்டு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்துவருகிறார்.
தினமும் ஒரு சிறப்பு அலங்காரத்துடன் நம்பெருமாள் காட்சியளித்து வருவதால் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்துவருகின்றனர். இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வரும் ஜனவரி ஆறாம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: களைகட்டும் கோவை விழா - கலக்க காத்திருக்கும் இயற்கை விசைப்படகுகள்!