தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய பத்து மாவட்டங்கள் நீங்கலாக, மீதமுள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில் மொத்தமுள்ள 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு நடந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தமிழ்நாடு முழுவதும் பரப்பரபாக நடைபெற்றுவருகிறது.
- பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குகள் எண்ணப்படும் மையத்தில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் அணில் மேஷராம் ஆய்வு மேற்கொண்டார்.
- மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில் ஒன்றியங்களின் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணும் பணி வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
- அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணும் பணிகளை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் பார்வையாளருமான ராஜசேகர் பார்வையிட்டார்.
- தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 14 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருகிறது.
- திருச்சி மாவட்டத்தில் 14 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றுவருகிறது.
- பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு ஒன்றியங்களில் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை கட்சிப் பிரமுகர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் தொடங்கியது.
- நாகப்பட்டினம் மாவட்டத்தில் 11 ஒன்றியங்களுக்கு வாக்கு எண்ணிக்கை வேகமாக நடைபெற்றுவருகிறது.