ETV Bharat / state

'இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமையே காரணம்' - கார்த்தி சிதம்பரம் - h.raja

திருச்சி: இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதற்குக் காங்கிரஸ் கட்சி காரணம் இல்லை என்று சிவகங்கைத் தொகுதி மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

karthi
karthi
author img

By

Published : Dec 18, 2019, 9:18 AM IST

திருச்சி விமான நிலையத்தில் சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், 'பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

முத்தலாக் தடை சட்டத்தைக் கொண்டு வந்தது. இச்சட்டம் கொண்டுவர வேண்டிய ஒன்றுதான். ஆனால், இதை குற்றமாக மாற்றியுள்ளனர். இது இஸ்லாமியர்களை அச்சுறுத்தும் செயலாகும்.

தற்போது குடியுரிமை சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இத்தகைய மத்திய அரசின் நடவடிக்கை மூலம் ஹிட்லர் ஆட்சியைக் கொண்டுவர முயற்சிகள் நடைபெறுகிறது. ஹிட்லரும் கூட்டணிக் கட்சிகளின் தலைமையுடன் தான் ஆட்சிக்கு வந்தார். பின்னர் சர்வாதிகாரியாக மாறினார். இதே போன்ற நிலையை இந்தியாவில் ஏற்படுத்த தான் மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதை எதிர்த்து தான் தற்போது போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்திருக்க மாட்டார். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் இருந்து அதிமுக மாறுபட்டு சென்று கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் வாக்குகள் அடிப்படையில் இந்த மசோதாவைத் தோற்கடிக்க முடியாது. அதனால் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்.

செய்தியாளர் சந்திப்பில் கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் காரணமல்ல - கார்த்தி:

இலங்கையில் நடந்தது இனப் போராட்டம். இதை நிறுத்த காங்கிரஸ் கட்சி முயற்சி செய்தது. அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு ராஜபக்சவும், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைமையையும் தான் காரணம். அங்கு நடந்த போரின் காரணமாக தான் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர்' என்றார்.

ஹெச்.ராஜாவை கலாய்த்த கார்த்தி

தொடர்ந்து 'உங்களது தந்தை ப. சிதம்பரமும், நீங்களும் சிறை செல்வீர்கள்' என்று ஹெச்.ராஜா கூறியது குறித்த கேள்விக்கு? கார்த்தி சிதம்பரம் பதில் கூறுகையில், 'ராஜாவிடம் 33 22 44 என்ற எண்களை மட்டும் கூறுங்கள். அவர் புரிந்து கொள்வார்' என்று கிண்டலாகப் பதிலளித்தார்.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு: திமுகவினர் ஆர்ப்பாட்டம்!

Intro:இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி காரணம் இல்லை என்று சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறினார்.Body:
திருச்சி:
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி காரணம் இல்லை என்று சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறினார்.

சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்த அவர் அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கார்த்திக் சிதம்பரம் கூறுகையில், மத்திய பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்தது. இச் சட்டம் கொண்டுவர வேண்டிய ஒன்றுதான். ஆனால் இதை குற்றமாக மாற்றியுள்ளனர். இது இஸ்லாமியர்களை அச்சுறுத்தும் செயலாகும். காஷ்மீரின் 370 ஆவது சட்டப்பிரிவு அமல்படுத்தப்பட்டு 3 முன்னாள் முதல்வர்கள் கடந்த 4 மாதமாக சிறை வைக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து
தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டு வரப்பட்டது. இந்திய பிரஜை அல்லாதவர்கள் இதில் இடம்பெற மாட்டார்கள். அப்படி இல்லாதவர்களை நாடு கடத்த திட்டமிட்டது. தற்போது குடியுரிமை சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது.
இதன் மூலம் அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய மூன்று இஸ்லாமிய நாடுகளில் இருந்து அகதிகளாக வரும் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க இயலாது. அதேபோல் இலங்கை, மாலத்தீவு, பூட்டான், நேபாள் நாடுகளிலிருந்து வரும் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய மத்திய அரசின் நடவடிக்கை மூலம் ஹிட்லர் ஆட்சியை கொண்டுவர முயற்சிகள் நடைபெறுகிறது. ஹிட்லரும் கூட்டணி கட்சிகளின் தலைமையுடன் தான் ஆட்சிக்கு வந்தார். பின்னர் சர்வாதிகாரியாக மாறினார். இதேபோன்ற நிலையை இந்தியாவில் ஏற்படுத்த தான் மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதை எதிர்த்து தான் தற்போது போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு நடைபெறும் இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும். இதற்கு எங்களது கட்சி முழு ஆதரவு அளிக்கும். நாங்கள் இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து வாக்களித்தோம். ஆனால் அதிமுக ஆதரவு அளித்தது. ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்திருக்க மாட்டார். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் இருந்து அதிமுக மாறுபட்டு சென்று கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் வாக்குகள் அடிப்படையில் இந்த மசோதாவை தோற்கடிக்க முடியாது. அதனால் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம் என்றார்.

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்றும், ஆனால் தற்போது அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுகிறது என்ற குற்றச்சாட்டு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு கார்த்தி சிதம்பரம் பதில் கூறுகையில், இலங்கையில் நடந்தது இனப் போராட்டம். இதை நிறுத்த காங்கிரஸ் கட்சி முயற்சி செய்தது. அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு ராஜபக்சேவும், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைமையையும் தான் காரணம். அங்கு நடந்த போரின் காரணமாக தான் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்றார்.
தொடர்ந்து உங்களது தந்தை ப. சிதம்பரமும், நீங்களும் சிறை செல்வீர்கள் என்று எச்.ராஜா கூறி வருவது குறித்த கேள்விக்கு கார்த்தி சிதம்பரம் பதில் கூறுகையில், ராஜாவிடம் 22 33 44 என்ற எண்களை மட்டும் கூறுங்கள். அவர் புரிந்து கொள்வார் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.