ETV Bharat / state

கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் தற்கொலை

வேலை வாங்கித் தருவதாகப் பணம் பெற்ற மூவரில் காவல்துறையின் அலட்சியத்தால், இரண்டு பேர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், எஞ்சியுள்ள பிரசன்னாவை காவல் துறையினர் உரிய விசாரணை செய்து பணம் கொடுத்து ஏமாந்த ரூபாய் 2.25 கோடி பணத்தை மீட்டுக் கொடுக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை

author img

By

Published : Mar 3, 2022, 3:49 PM IST

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கரியமாணிக்கம் ஊராட்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராகப் பணிபுரிந்தவர், செல்வராஜ். இவர் இதே பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

இவர் இந்தக் கிராமத்தில் உள்ள ஒன்பது நபர்களிடம் அரசுப்பள்ளிகளில் ஜூனியர் அசிஸ்டென்ட் வேலை, பொதுப்பணித்துறையில் வேலை, வட்டாட்சியர் அலுவலகத்தில் வேலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை என அரசு அலுவலகங்களில் படிப்பிற்கு ஏற்றார்போல அரசு வேலை வாங்கித் தருவதாக தலா ரூபாய் 5 லட்சம் வீதம் 45 நபர்களிடம் ரூ. 2.25 கோடி ரூபாய் கடந்த ஒரு ஆண்டிற்குள் பெற்றுள்ளார்.

இந்த கிராம நிர்வாக உதவியாளர் செல்வராஜூடன் துறையூர் பகுதியைச் சேர்ந்த பிரசன்னா, இவரது தம்பி சந்துரு ஆகியோரும் சேர்ந்து, இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர். பணம் கொடுத்த நபர்களுக்கு வேலை கிடைக்காததால், பணத்தைத்திருப்பிக்கேட்டுப் பணம் கொடுத்தவர்கள் சந்துரு மற்றும் அவரது அண்ணன் பிரசன்னா, கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் செல்வராஜ் ஆகியோரிடம் தொந்தரவு செய்துள்ளனர்.

ரூ 2.25 கோடி மோசடி செய்த கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் தற்கொலை

நீண்ட நாட்களாகியும் கொடுத்த பணத்தைத் திருப்பி கொடுக்காத நிலையிலும் வேலையும் கிடைக்காத நிலையிலும் பணத்தைக் கொடுத்த நபர்கள் துறையூர் காவல் நிலையத்தில் சந்துரு, பிரசன்னா ஆகியோர் மீது புகார் கொடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த சந்துரு கடந்த ஜனவரி மாதம் தற்கொலை செய்து கொண்டார். இதனால் பணம் கொடுத்தவர்கள் தாங்கள் பணத்தைக் கொடுத்து ஏமாந்துவிட்டோமோ என அஞ்சி, செல்வராஜ் மற்றும் பிரசன்னா ஆகியோர் மீது திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த மாதம் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் புகார் மனு அளித்தனர்.

சிறுகனூர் காவல்துறையினர்
சிறுகனூர் காவல்துறையினர்

இந்நிலையில் செல்வராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். புகார் தொடர்பாக சிறுகனூர் காவல்துறையினர் எவ்வித விசாரணையும் நடத்தாத நிலையில், செல்வராஜ் வசிக்கும் கிராமத்தைச் சேர்ந்த 9 பேர் செல்வராஜிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். பணம் கொடுத்தவர்களின் தொந்தரவு தாங்க முடியாமல் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் செல்வராஜ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலையைக் கைவிடுக - CALL 104
தற்கொலையைக் கைவிடுக - CALL 104

வேலை வாங்கி தருவதாகப் பணம் பெற்ற மூவரில் காவல்துறையின் அலட்சியத்தால், இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், எஞ்சியுள்ள பிரசன்னாவை காவல் துறையினர் உரிய விசாரணை செய்து பணம் கொடுத்து ஏமாந்த ரூபாய் 2.25 கோடி பணம் அரசியல்வாதியிடம் சென்றதா அல்லது அரசு அலுவலர்களிடம் சென்றதா அல்லது இவர்கள் ஏதாவது சொத்தில் முதலீடு செய்து உள்ளனரா என உரிய விசாரணை செய்து பணம் கொடுத்து ஏமாந்த 45 பட்டதாரிகளுக்கு தங்களது பணத்தை மீட்டுக்கொடுக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: காப்பாத்துங்க...ப்ளீஸ் - சாலையில் கதறி அழுத காதலர்கள்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.