ETV Bharat / state

இந்தித் திணிப்பு குறித்து கமல்ஹாசன் கருத்து - இந்தி எதிர்ப்பு

திருச்சி:மும்மொழிக் கொள்கை அமலுக்கு வருவது பற்றி மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

kamal haasan
author img

By

Published : Jun 1, 2019, 2:18 PM IST

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கரூர் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் மும்மொழிக் கொள்கை அமலுக்கு வருவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

கமல்ஹாசன் பேட்டி

அதற்கு பதிலளித்த அவர், ”நான் இந்தி படங்களில் எல்லாம் நடித்தவன். இந்தியா அவரவர் மொழியை மதிக்கும் என்ற நம்பிக்கையில் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறோம். எதையும் திணிக்கக் கூடாது என்பது என்னுடைய கருத்து, விருப்பமுள்ளவர்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்வார்கள். தமிழர்கள் தன் மொழியை விட்டுக்கொடுத்து பிற மொழியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மொழியை திணிக்கக் கூடாது என்பதை தமிழர்கள் அழுத்தமாகவே சொல்லியிருக்கிறார்கள்” என்றார்.

Intro:தமிழர்கள் வேறு மொழியை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்பக்கூடாது என கமல்ஹாசன் கூறினார்.

Body:திருச்சி:
மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் கரூர் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று திருச்சி வந்தார்.
அப்போது திருச்சி விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், நான் இந்தி படங்களில் எல்லாம் நடித்தவன். இந்தியனாக அவரவர் மொழி பாதிக்காமல் இருக்க வேண்டும். எதையும் திணிக்க கூடாது. விருப்பம் உள்ளவர்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக் கொள்வார்கள். குறிப்பாக தமிழர்கள் தங்களது மொழியை விட்டு விட்டு இன்னொரு மொழியை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்ப கூடாது. எதையும் திணிக்க கூடாது என்பது தான் எனது வேண்டுகோள். இதற்கு முன்பே ஒரு மிகப் பெரிய அழுத்தமாக அதை கூறியிருக்கிறோம். இந்தியை கற்றுக் கொண்டால் தான் வேலை கிடைக்கும் என்பது கிடையாது. தேர்தலில் வாக்குகள் மாயமானது என்று ஒட்டுமொத்தமாக கூறிவிட முடியாது. பிழைகள் இருந்திருக்கலாம். அது என்ன என்பதை கண்டுபிடிக்க வேண்டும். தேர்தல் முடிவுக்குப் பிறகு தமிழகம் புறக்கணிக்கப்படும் என்ற அச்சம் எல்லோருக்கும் உள்ளது. அது அச்சமாக இருக்க வேண்டியதில்லை. சந்தேகமாக மட்டும் இருந்தால் போதும். மோடியின் 5 ஆண்டு காலம் ஆட்சி நன்றாக இருக்க வேண்டும் என்பதை இந்தியனாக ஆசைப்படுகிறேன் என்றார்.

Conclusion:மோடி நாய் ஐந்தாண்டு கால ஆட்சி நன்றாக இருக்கவேண்டும் என்று இந்தியனாக ஆசைப்படுகிறேன் என்று கமல்ஹாசன் கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.