சென்னை: தனியார் விடுதிகளில் உள்ள குளியலறை, படுக்கையறை போன்ற இடங்களில் ரகசிய கேமராக்கள் வைத்து விடுதி உரிமையாளர்கள் கைதாகும் சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன. இதனால் குடும்பத்துடனோ அல்லது ஆண், பெண் சேர்ந்து விடுதிகளில் அறை எடுத்து தங்கும்போதோ, இதுகுறித்து ஒருவித அச்சமும் இருந்து வருகிறது. இந்த சூழலில், ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவில் அருகே பக்தர்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமராக்களை வைத்திருந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களை திடுக்கிட செய்துள்ளது.
இதுபோன்ற சூழலில் உடை மாற்றும் அறைகள், தனியார் விடுதிகள் போன்ற தற்காலிகமாக நாம் பயன்படுத்தக்கூடிய இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் ரகசிய கேமராக்களை நாம் கண்டறிவதெப்படி? எந்தெந்த இடங்களில் கேமராக்களை பொறுத்த சாத்தியம் உள்ளது என்பவனவற்றை குறித்து சென்னையை சேர்ந்த சிசிடிவி கேமரா நிபுணர் ஸ்ரீ ராம் நம்மிடம் பகிர்ந்துள்ளார். அவற்றை தெரிந்துகொள்வோம்..
குண்டூசி ஓட்டை
நிபுணர் ஸ்ரீ ராம், '' தனியார் ஓட்டல், லாட்ஜில் உள்ள குளியறையில் உள்ள ஓடோனில், ஸ்பேரே அடிக்கும் மிஷின், டிவி செட் ஆப் பாக்ஸ், கடிகாரம், போட்டோ ஃப்ரேம் ஆகியவற்றிலும் கேமராவை ரகசியமாக பொறுத்துவார்கள். காகிதத்தில் குண்டு ஊசி வைத்து ஓட்டை போட்டால் இருக்கும் அளவே அந்த கேமராவிற்கு போதுமானது. அதிலேயே வீடியோ எடுத்துக்கொள்ளலாம், ஆனால், அவற்றை கண்டறிவது சிரமமானது.
இதையும் படிங்க: பெண் பக்தர்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமராக்கள்.. ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!
டார்ச் லைட் சோதனை
குளியலறையில் தேவையில்லாத பொருள்கள் இருந்தால் அவற்றை சோதிக்க வேண்டும். ஒருவேளை அந்த பொருளில் சந்தேகம் இருப்பின், அந்த பொருளின் மீது டூத் பேஸ்ட்டை தடவி விட வேண்டும். அறைக்குள் சென்றவுடன் முழு விளக்கையும் அணைத்துவிட்டு, கைபேசியில் உள்ள டார்ச் லைட் வைத்து சந்தேகம் இருக்கும் இடங்களில் அடித்து பார்த்தால், கேமராவாக இருந்தால் லென்ஸ் மின்ன செய்யும். ரகசிய கேமராவின் வெளிச்சமும் தெரியும்.
டெக்னிக்களாக கண்டுபிடிக்க வேண்டுமென்றால், செல்போனில் Ip scanner app-யை இன்ஸ்டால் செய்து, தங்கும் ஓட்டலில் உள்ள Wi-Fi-யை ஸ்கேன் (SCAN) செய்தால் அங்கு இருக்கும் அனைத்து ரகசிய கேமராக்களையும் காண்பிக்கும்.
குறிப்பாக, விடுதியில் அறை எடுக்கும் பொதுமக்கள் குளியலறையில் ஒரு துணியை கட்டிக்கொண்டு குளிப்பதும், உடையை மாற்றுவதும்தான் சிறந்தது'' என்றார்.