ETV Bharat / state

இந்து மத விவகாரங்களில் சங்கராச்சாரியார்களே கருத்து கூறலாம்; பாஜக அல்ல - கி.வீரமணி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 12, 2024, 9:16 PM IST

K.Veeramani: துணை முதலமைச்சராகும் தகுதிகள் உதயநிதி ஸ்டாலினுக்கு உள்ளதாகவும், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகலாமா? என முதலமைச்சரே முடிவெடுப்பார் எனவும், இந்து மதத்தைப் பற்றி கருத்துச் சொல்லத் தகுதியுள்ளவர்கள் சங்கராச்சாரியார்களே தவிர, பாஜக அல்ல எனவும் கி.வீரமணி கருத்து தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
கி.வீரமணி பேட்டி

திருச்சி: கே.கே.நகரில் உள்ள பெரியார் மணியம்மை நூற்றாண்டு கல்வி வளாகம் மற்றும் நாகம்மை ஆசிரியை பயிற்சி நிறுவனத்தில் பொங்கல் விழா இன்று (ஜன.12) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழா கொண்டாட்டத்தில் திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி பங்கேற்றார். பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்ட பொங்கலை கி வீரமணி மாணவ மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கி.வீரமணி கூறுகையில், 'ராமர் கோயில் திறப்பு விழாவில் இந்திய (INDIA Alliance) கூட்டணியைச் சேர்ந்த பெரும்பாலான கட்சிகள் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்திருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். 'பக்தி' என்பது அவரவர் தனிச்சொத்து; ஆனால், பாஜகவினர் அதை அரசியலுக்குப் பயன்படுத்துகிறார்கள். கட்டி முடியாத கோயிலைப் பிரதிஷ்டை செய்யக்கூடாது என சங்கராச்சாரியார்கள்‌‌ கூறியுள்ளனர்.

இந்து மத விவகாரங்கள் தொடர்பாக சங்கராச்சாரியார்கள் தான் கருத்துக் கூற முடியுமே தவிர, பாஜகவினர் கூற முடியாது' என்றார். மேலும், 'பாஜகவை எதிர்ப்பவர்கள் சனாதன விரோதிகள், இந்து மத விரோதிகள் எனக்கூறக் கூறும் பாஜகவினர் தற்பொழுது, சங்கராச்சாரியார்களைப் பார்த்து அவ்வாறு கூறுவார்களா? முடிந்தால் பாஜகவினர் அதைக் கூறட்டும்; இல்லையென்றால், அவ்வாறு மற்றவர்களைக் கூறுவதை நிறுத்த வேண்டும்.

தேர்தல் வரக்கூடிய சூழலில் தற்பொழுது பாஜகவினர் ராமனையே வேட்பாளராக நிறுத்துகின்றனர். ராமன் ஒருபோதும் வேட்பாளராகக் கூடாது. ஓ.பன்னீர்செல்வம் கோட்டைக்குச் செல்வேன் எனக் கூறாமல், ஜெயிலுக்கு செல்வேன் எனக் கூறி வருகிறார். ஆண்டிகளுக்குக் கூட மடம் இருக்கிறது; ஆனால், ஓ.பன்னீர்செல்வத்திற்கு அது கூட இல்லை. அவருக்கு இடம் எங்கும் இல்லை. எங்குப் போவது என தெரியாமல் நின்று கொண்டிருக்கிறார்.

துணை முதலமைச்சராக உதயநிதி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்பது குறித்த கேள்விக்கு அதனை அறிவிப்பவர்கள் அறிவிக்க வேண்டும், அவருக்குத் தகுதி இருக்கா? இல்லையா? என்பதை முடிவு செய்ய வேண்டியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அமைச்சர்கள் நியமனத்தில் இது போன்ற செயலில் ஆளுநர் ஈடுபட்டு மூக்கு உடைபட்டு இருக்கிறார். அவருடைய பணியைச் சிறப்பாகவும் அடக்கமாகவும் செய்து வருகிறார். அதனால், அவர் அனைத்து தகுதிகளையும் பெற்றவர் எனக் கூறினார்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்குவதே மு.க.ஸ்டாலினின் நோக்கம் - அண்ணாமலை குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.