ETV Bharat / state

திருச்சியில் பட்டப்பகலில் 300 பவுன் நகை கொள்ளை

திருச்சியில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 300 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நகை கொள்ளை
நகை கொள்ளை
author img

By

Published : Jan 24, 2023, 7:24 AM IST

Updated : Jan 24, 2023, 3:18 PM IST

திருச்சி: திருவெறும்பூர் அருகே உள்ள ஐஏஎஸ் நகரை சேர்ந்தவர் நேதாஜி. இவர் பெல் நிறுவனத்தில் ஊழியராக இருந்து, விருப்ப ஒய்வுபெற்று உள்ளார். அவரது 3 தம்பிகளுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார். இவரது தம்பி தேவேந்திரனின், இரண்டாவது மகன் பாலாஜி என்பவருக்கு திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நேற்று காலை தொழிலதிபர் மகளுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதனால் இவரது குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் நிச்சயதார்த்த விழாவிற்கு சென்றுள்ளனர். இந்த விழாவின்போது வீட்டில் பொருத்துப்பட்டுள்ள எமர்ஜென்சி சென்சார் மூலம் நேதாஜியின் மகள் செல்போனுக்கு எச்சரிக்கை தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் உடனடியாக வீட்டிற்கு ஆளை அனுப்பி பார்த்துள்ளனர்.

அப்போது வீட்டின் சென்சார்பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதும், வீட்டில் இருந்த 300 பவுன் தங்க நகைகள் திருட்டுப் போய் உள்ளதும் தெரியவந்தது. இதுகுறித்து திருவெறும்பூர் காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பார்வையிட்டனர். கொள்ளை நடந்த இடத்திற்கு கை ரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைகப்பட்டது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஏடிஎம்மில் பணம் செலுத்த வந்த நபரிடம் கத்திமுனையில் ரூ.5 லட்சம் வழிப்பறி

Last Updated : Jan 24, 2023, 3:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.