திருச்சி: லால்குடி அருகே குமுளூரில் உள்ள ஸ்ரீ ஆயிரவள்ளி அம்மன் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ஸ்ரீ ஆயிரவள்ளி அம்மன் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இந்தக் ஜல்லிக்கட்டு போட்டியை லால்குடி வருவாய் கோட்டாச்சியர் வைத்தியநாதன் தொடங்கி வைத்தார். முன்னதாக ஜல்லிக்கட்டு வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்தப் போட்டியில் திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட பகுதியில் இருந்து 600 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
பரபரப்பாக நடைப்பெற்ற போட்டியில் ஒரு சில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் இருந்தாலும், ஒரு சில காளைகளை வீரர்கள் அடக்கினார். போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் கட்டில், பீரோ, தங்கக்காசு, வெள்ளிக்காசு, மின்விசிறி உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
லால்குடி டிஎஸ்பி சீதாராமன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுவரை நடைபெற்ற போட்டியில் வீரர்கள் பார்வையாளர்கள் என 15 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: திருச்சி புனித லூர்து மாதா ஆலயத் திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு - முன்னாள் அமைச்சர் பங்கேற்பு