திருச்சி: திருவெறும்பூர் கூத்தைப்பார் முனியாண்டவர் கோயில் திருவிழா முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை மகேஷ் பொய்யாமொழி கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். இந்தப் போட்டியில் 400 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.
நான்கு சுற்றுகளாக நடைபெறும் ஜல்லிக்கட்டில் முதல் சுற்றில் 75 மாடுபிடி வீரர்கள் களம் இறக்கப்பட்டனர். இதில் முதல் 10 மாடுபிடி வீரர்களுக்குத் தங்கக் காசுகளை மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
இது, திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் மூன்றாவது ஜல்லிக்கட்டுப் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. மாடுபிடி வீரர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுள்ளனரா என்பதைக் கண்டறிந்த பிறகு களத்தில் இறங்க அனுமதிக்கப்பட்டனர்.
கூத்தைபார் ஜல்லிக்கட்டைக் காண சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஏராளமானோர் கூத்தைபாருக்கு வந்து வீடுகளிலும், மாடியிலும் அமர்ந்து கண்டுகளித்தனர்.
இதையும் படிங்க: மண்டபத்தில் குத்தாட்டம்... மணமகளுக்கு பளார்... திருமணம் நிறுத்தம்